தேசிய விருதை மிஸ் பண்ணிய யுவனின் 5 படங்கள்.. மனதில் ரணத்தை ஏற்படுத்திய 7 ஜி ரெயின்போ காலனி

யுவனின் இசைக்கு மயங்காத ஆளே இல்லை என்று கூட சொல்லலாம். தனது இன்னிசை மற்றும் காந்தக் குரலால் ரசிகர்களை வசீகரம் செய்துள்ளார். ஆனால் இதுவரை யுவன் ஷங்கர் ராஜா ஒரு தேசிய விருது கூட பெறவில்லை என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் தேசிய விருது பெற வேண்டிய யுவனின் 5 படங்களை தற்போது பார்க்கலாம்.

ஆரணிய காண்டம் : ஒரு கேங்ஸ்டர் குரூப்பில் நடக்கும் சிலந்தி பின்னல்களே ஆரண்யகாண்டம். இப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் என்ன செய்கிறார்களோ அதனுடைய பிரதிபலிப்பு பின்னணி இசையில் ஒலிக்கும். அவ்வாறு யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தில் தனது பிரம்மாண்டத்தை காண்பித்து இருந்தார்.

தங்க மீன்கள் : ராம் இயக்கத்தில் அப்பா, மகள் பாசத்தை போற்றும் வகையில் அமைந்த படம் தங்கமீன்கள். இப்படத்தில் ஆனந்த யாழை பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை நா முத்துக்குமார் பெற்றிருந்தார். எப்போதுமே யுவன், நா முத்துக்குமார் கூட்டணியில் வெளியாகும் பாடல்கள் வேற லெவலில் இருக்கும். அதை படைசாற்றும் விதமாக அமைந்தது தங்கமீன்கள் படம்.

பருத்திவீரன் : அமீர் இயக்கத்தில் கார்த்தி, ப்ரியாமணி நடிப்பில் வெளியான திரைப்படம் பருத்திவீரன். இப்படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளையராஜா அறியாத வயசு என்ற பாடலை பாடியுள்ளார். மேலும், மாணிக்க விநாயகம், ஸ்ரேயா கோஷல், யுவன்ஷங்கர்ராஜா குரலில் அய்யய்யோ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

7 ஜி ரெயின்போ காலனி : செல்வராகவன், நா முத்துக்குமார், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வெளியாகி ரசிகர்களை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் 7ஜி ரெயின்போ காலனி. கனா காணும் காலங்கள், நினைத்து நினைத்து பார்த்தேன், கண் பேசும் வார்த்தை என இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலுமே பெரிய அளவில் பேசப்பட்டது.

புதுப்பேட்டை : துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி படங்களைத் தொடர்ந்து செல்வராகவன், யுவன் கூட்டணியில் உருவான படம் புதுப்பேட்டை. இப்படத்திலும் நா முத்துக்குமார் பாடல் வரிகள் எழுதி இருந்தார். மேலும் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் புதுவிதமான இசை கருவிகளை யுவன் பயன்படுத்தியிருந்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்