தனுசை நம்பி 3 வருசமா ஏமாந்தது தான் மிச்சம்.. கவலையில் இளம் இயக்குனர்

தனுஷ் தனக்கு பட வாய்ப்பு தருவார் என நம்பிக்கொண்டு மூன்று வருடமாக காத்திருந்த இயக்குனரை புறம்தள்ளிவிட்டு நேற்று வந்த இயக்குனர் ஒருவருக்கு தன்னுடைய அடுத்த பட வாய்ப்பைக் கொடுத்து விட்டதாக தனுஷ் மீது வருத்தத்தில் உள்ளார் பிரபல இளம் இயக்குனர்.

தனுஷ் தற்போது ஹாலிவுட், பாலிவுட் என அனைத்து பக்கமும் சென்று வெற்றிக்கொடி நாட்ட துவங்கிவிட்டார். அந்தவகையில் அடுத்ததாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக பட்ஜெட்டில் தயாரித்துள்ள த கிரே மேன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் D43 படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் புதிய படமும் ஹைதராபாத்தில் தான் தொடங்க உள்ளன.

இப்படி பிஸியாக இருக்கும் தனுஷ் ஏற்கனவே தனக்கு மாரி படத்தை கொடுத்த பாலாஜி மோகனுக்கு வாய்ப்பு தருவதாக கூறி இருந்தாராம். அவரை நம்பி கடந்த மூன்று வருடமாக வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வந்துள்ளார் பாலாஜி மோகன்.

ஆனால் தற்போது அவருக்கு கொடுத்த கால்சீட்டை அப்படியே தூக்கி இளம் இயக்குனர் இளன் என்பவருக்கு கொடுத்து விட்டாராம். இவர் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஆகியோரை வைத்து பியார் பிரேமா காதல் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்திருந்தார்.

இவர் சொன்ன ரொமான்டிக் கதை தனுஷுக்கு பிடித்ததால் அவரை கழட்டி விட்டதாக கூறுகின்றனர். இதனால் ஏமாந்து போன பாலாஜி மோகன் அடுத்ததாக சித்தார்த்தை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

dhanush-balaji mohan-cinemapettai
dhanush-balaji mohan-cinemapettai
- Advertisement -