சூர்யாவுக்கு ஏற்ற தரமான கதை இருக்கு, ஆனா எனக்கெல்லாம் வாய்ப்பு தருவாரா? வருத்தத்தில் இளம் இயக்குனர்

சமீபத்தில் காவல்துறையை மையப்படுத்தி படம் எடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இளம் இயக்குனர் ஒருவர் சூர்யாவுக்காக கதை எழுதி வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் தான் சூர்யா(suriya). கடந்த சில வருடங்களாக அவரது வெற்றி நடை கொஞ்சம் சறுக்கி விட்டது.

ஆனால் கடைசியாக சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இழந்த சூர்யாவின் மார்க்கெட்டை மீட்டுக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சூர்யா வெற்றி இயக்குனர்களை தேடித்தேடி நடித்து வருகிறார்.

அப்படிப்பட்ட சூர்யா இளம் இயக்குநருக்கு வாய்ப்புக் கொடுப்பாரா என்ற சந்தேகம் கிளம்பிய நிலையில், திடீரென கூட்டத்தில் ஒருவன் என்ற சுமாரான படத்தை கொடுத்த ஞானவேல் என்ற இயக்குனர் இயக்கத்தில் கெஸ்ட் ரோலில் ஒரு படம் நடித்து வருகிறார்.

அந்தவகையில் காவல்துறை உங்கள் நண்பன் படத்தை இயக்கிய ஆர்டிஎம் என்ற இளம் இயக்குனர் சூர்யாவுக்கு தீனி போடும் அளவுக்கு ஒரு கதையை வைத்திருப்பதாகவும் ஆனால் சூர்யா தனக்கு வாய்ப்பு தருவாரா எனவும் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக சூர்யா இளம் இயக்குனர்கள் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருவதால் கண்டிப்பாக இந்த படத்தின் கதையை கேட்டு ஒருவேளை அவருக்கு பிடித்திருந்தால் அவரது சொந்த தயாரிப்பில் தயாரிக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

RDM-kaavalthurai-ungal-nanban-director
RDM-kaavalthurai-ungal-nanban-director

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -