நித்தியானந்தாவை கல்யாணம் செய்து கொள்ள விரும்பும் இளம் நடிகை.. ரஞ்சிதாவிற்கு போட்டியாக வரும் பிரபலம்

தமிழ்நாட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார்களில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் நித்தியானந்தா சுவாமிகள். ஆரம்பத்தில் இவரை கடவுளின் மறு உருவமாக பார்த்து வந்த மக்கள் இவரின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட பிறகு இவரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர்.

இவர் நடிகை ரஞ்சிதாவுடன் படு நெருக்கமாக இருக்கும் ஆபாச காட்சிகள் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் இருந்த நல்ல பெயரும் கெட்டுப் போனது. அதன் பிறகு இவர் குறித்த பல சர்ச்சைகள் ஊடகங்களில் வெளிவந்தது.

அதிலும் முக்கியமாக கடத்தல், மோசடி புகார் உள்ளிட்ட பல வழக்குகள் இவர் மீது இருக்கிறது. ஆனால் இது எதற்கும் அசராத நித்தியானந்தா தற்போது கைலாசா என்ற ஒரு தனி நாட்டில் ராஜ்ஜியம் செய்து கொண்டிருக்கிறார். அங்கு அவரை சுற்றி பல சீடர்கள் இருக்கின்றனர். மேலும் விலைமதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் நிறைய பணங்கள் அவர் கைவசம் இருக்கிறதாம்.

தமிழ்நாட்டில் இருந்து மட்டுமில்லாமல் வெளிநாட்டில் இருந்தும் கூட நிறைய பக்தர்கள் வந்து அவருடைய ஆசிரமத்தில் தங்கி செல்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு இவருடைய உடலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், மரணம் அடைந்து விட்டதாகவும் பல செய்திகள் வெளிவந்தது.

ஆனால் நித்தியானந்தா அதற்கு மறுப்பு தெரிவித்து நான் நலமுடன் இருக்கிறேன் என்று தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் தமிழில் வாமனன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பிரியா ஆனந்த் நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, எனக்கு நித்தியானந்தா சுவாமிகளை மிகவும் பிடிக்கும் அவர் மீது எனக்கு அளவு கடந்த கிரஷ் இருக்கிறது. அவரை திருமணம் செய்து கொள்ள எனக்கு இஷ்டம். அப்படி செய்து கொண்டால் என் பெயரை கூட மாற்ற தேவையில்லை. ப்ரியா ஆனந்த், நித்தியானந்த் என்ற பெயர்கள் நன்றாக மேட்ச் ஆகிறது.

அதனால் பெயரை மாற்றும் கஷ்டம் கூட எனக்கு இல்லை என்று சமூக வலைத்தளங்களில் மிகவும் ஓபனாக கூறி இருக்கிறார். மேலும் அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அதனால் தான் அவரைச் சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்கள். அவருக்கு எல்லோரையும் சுலபமாக ஈர்க்க தெரியும் என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு தற்போது இணையதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Next Story

- Advertisement -