சூர்யா பட வாய்ப்பு போச்சே.. ஹரி மீது செம கோபத்தில் பிரபல நடிகை

முன்னதாக சூர்யா(suriya) மற்றும் ஹரி கூட்டணியில் ஒரு படம் உருவாக இருந்தது. தற்போது அந்த படம் கைவிடப்பட்டதால் சூர்யா படத்தை நம்பி மிகப்பெரிய பிளான் போட்டு வைத்தது எல்லாம் வீணாகி விட்டதே என்ற கவலையில் இருக்கிறாராம் அந்த பிரபல நடிகை.

சூரரைப் போற்று படத்திற்கு முன்பே சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் அருவா என்ற படம் உருவாக இருந்தது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல்ராஜா தயாரிக்க இருந்தார்.

முன்னதாக என் ஜி கே மற்றும் காப்பான் போன்ற படங்கள் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால் அவசரஅவசரமாக இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால் எந்த வேகத்தில் உருவாக்கப்பட்டதோ அதே வேகத்தில் அந்தப் படம் கைவிடப்பட்டது.

அதற்கு காரணம் ஹரி எழுதிய கதை சூர்யாவுக்கு பிடிக்காதுதான். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்ததால் இப்போதைக்கு நாம் படம் செய்தால் சரியாக இருக்காது என டாட்டா காட்டி விட்டார் சூர்யா. அதுவும் நல்லதுதான்.

அதேபோல் அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை ராசி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும் ராசி கண்ணா ஒரு பேட்டியில் ஓபன் ஆகவே தெரிவித்திருந்தார்.

மேலும் சூர்யாவின் பட வாய்ப்பை பிடித்து அப்படியே தமிழ் சினிமாவில் உள்ள விஜய், அஜித் ஆகியோரின் பட வாய்ப்புகளையும் கைப்பற்றி விடலாம் என்ற ராசி கண்ணாவின் பெரிய கனவில் பாறாங்கல்லை தூக்கிப் போட்டு விட்டார் ஹரி. தற்போது ஹரி சூர்யாவுக்கு எழுதிய கதையில் அருண் விஜய்யை வைத்து படம் இயக்கி வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்.

rashi-khanna-cinemapettai
rashi-khanna-cinemapettai