அஜித் படத்தில் நடித்தும் வாய்ப்பு இல்லை.. சீரியலுக்கு வந்த இளம் நடிகை

சமீபகாலமாக பெரிய திரை சின்னத்திரை என்ற எந்த வித்தியாசமும் இல்லை. அதற்கு காரணம் சின்னத்திரையில் இருப்பவர்கள் வெள்ளித்திரையில் சாதிக்க தொடங்கிவிட்டனர் என்பதால்தான்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர், வாணிபோஜன், பிக் பாஸ் கவின் போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். மேலும் தற்போது யூடியூப் பிரபலங்கள் கூட சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர்.

அப்படி சினிமாவுக்கும் சீரியலுக்கும் பெரிய அளவு வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அவர்கள் சின்னத்திரைக்கு வந்தார் ரசிகர்கள் கொஞ்சம் ஏளனமாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் தல அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்த இளம் நடிகை ஒருவர் பிரபல சீரியல் ஒன்றில் ஒரே ஒரு காட்சி வந்ததற்கு அவரது மார்க்கெட் திண்டாடிக் கொண்டிருக்கிறதாம். அஜித் வினோத் கூட்டணியில் முதல்முறையாக உருவான படம் தான் நேர்கொண்டபார்வை.

ஹிந்தியில் வெளியான பின் படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

abirami-ajith
abirami-ajith

இந்நிலையில் அபிராமி கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் நாயகன் நாயகிக்கு திருமணம் நடக்கும் போது சிறப்பு விருந்தினராக வருவது போல் அவருக்கு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்த பல முன்னணி நடிகர்களின் தயாரிப்பாளர்கள் இந்த பொண்ணு சீரியலுக்கு போய்விட்டது போல என கொடுத்த அட்வான்சை திரும்ப வாங்க ஆரம்பித்து விட்டார்களாம். ஐயோ பாவம்!

- Advertisement -