டாப் நடிகருடன் ஒரே படம்.. கோடியில் சம்பளம் கேட்கும் இளம் நடிகை!

மலையாளத் திரைப்படங்களில் பிரவேசம் செய்து, அதன்பிறகு தமிழ், ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் இளம் நடிகை வளரும் நடிகையாகவே இருக்கிறார்.

இப்படி இருக்கும் சூழலில் முன்னணி நடிகருடன் ஒரு படம் நடித்து விட்டேன் என்ற தெனாவட்டில் தற்போது இஷ்டத்திற்கு சம்பளம் கேட்கிறார். ஏனென்றால் இவரை அணுகும் புதுமுக இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்கத் தொடங்கி விட்டார்.

அத்துடன் முன்னணி நடிகருடன் ஒரே படத்தில் மாஸ் காட்டியதால் எக்கச்சக்கமான ரசிகர்களையும் பெற்றுவிட்டதாக அவருடைய நினைப்பு. ஆனால் அந்தப் படத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவிற்கு ஒன்றும் பேசப்படவில்லை இருப்பினும் சூப்பர் ஹிட் ஹீரோவுடன் நடித்து விட்டேன் என்ற பெருமை தான் மிச்சம்.

இதனால் தமிழ்சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்த உடனே தாறுமாறாக சம்பளத்தை ஏற்றியதால் தயாரிப்பாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இதுமட்டுமின்றி புதுமுக இயக்குனர்கள் இவரை அனுப்பும்போது சம்பளத்தை கறாராக பேசிய பிறகே படத்தைப் பற்றிய முழு விவரத்தையும் கேட்கிறாராம்.

இன்னும் இரண்டு படங்கள் நடிச்சாலே பல லட்சங்களில் வாங்கி வரும் சம்பளத்தை கோடியில் கண்டிப்பாக கேட்பார். ஆகையால் வளரும்போதே இவ்வளவு சம்பளம் கேட்டால் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டால் இவரைப் பிடிக்க முடியுமா என்று தயாரிப்பாளர்கள் திக்குமுக்காடி உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்