பா ரஞ்சித் படத்தை வேண்டாம் என்ற இளம் நடிகர்.. உங்களுக்கு கிறுக்கு புடிச்சுருக்கா சார்!

கபாலி, காலா போன்ற படங்களின் மூலம் வேறு ஒரு பாதைக்கு சென்ற பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய வலுவான பாதைக்கு திரும்பி விட்டார். ஆர்யாவுக்கும் சார்பட்டா படம் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளது.

கடந்த சில வருடங்களாக மார்க்கெட் இல்லாமல் தவித்து வந்த ஆர்யாவுக்கு பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா படம் வெற்றி அடைந்ததால் தற்போது ஆர்யா நடிக்கும் அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.

இப்படி ரஞ்சித் படத்தில் நடித்தால் அந்த நடிகரின் மார்க்கெட் உயர்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல் இளம் நடிகர் அசோக்செல்வன் பா ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்திலிருந்து கால்ஷீட் இல்லை என்ற காரணத்தினால் விலகியுள்ளார்.

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைக் கூட கொண்டாடாமல் பா ரஞ்சித் அடுத்ததாக நட்சத்திரம் நகர்கிறது என்ற பெயரில் முழுக்க முழுக்க ஒரு காதல் படத்தை எடுத்து வருகிறார். இரண்டு நடிகர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தில் ஒரு நாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். இவர் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியான பாவ கதைகள் என்ற வெப்சீரிஸில் சுதா கொங்கரா இயக்கிய பகுதியில் தங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.

அதேபோல் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாறியுள்ளவர் அசோக் செல்வன். அசோக் செல்வன் தற்போது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருவதால் அங்கு ஒரு படத்தில் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டதால் பா ரஞ்சித் படத்தை உதறித்தள்ளி விட்டாராம்.

சமீபத்தில்தான் ஓ மை கடவுளே என்ற வெற்றி படத்தை கொடுத்த அசோக் செல்வன், பா ரஞ்சித் படத்தில் நடித்திருந்தால் அவரது சினிமா மார்க்கெட் இன்னும் உயர்ந்திருக்கும். மேலும் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என பல நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் நல்ல வாய்ப்பை அசோக் செல்வன் வீணடித்து விட்டாரே எனவும் கவலைப்படுகின்றனர்.

ashok-selvan-cinemapettai
ashok-selvan-cinemapettai

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -