சார், உங்கள நம்பி வந்ததற்கு சும்மாவே இருந்திருக்கலாம்.. சங்கர் மீது அப்செட்டில் இளம் நடிகர்

தற்போதைக்கு ஷங்கர் என்ற பெயரைக் கேட்டாலே கோலிவுட் வட்டாரம் நடுங்குகிறது. அந்த அளவுக்கு பல பஞ்சாயத்துகளில் சிக்கி எதற்கும் முறையாக பதிலளிக்காமல் அனைவரையும் மிரளவிட்டு வருகிறார்.

ஒருபக்கம் பஞ்சாயத்து சென்று கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் இரண்டு படங்களை இயக்குவதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார். இதனால் பலரும் அவர் மீது செம கடுப்பில் உள்ளனர்.

இந்திய சினிமாவில் உள்ள பிரம்மாண்ட இயக்குனர்களில் முக்கியமானவராக வலம்வரும் சங்கர் லைகா நிறுவனத்திற்காக கமலை வைத்து இந்தியன் 2 படத்தை ஆரம்பித்ததும், அந்தப் படம் பாதியில் நின்று அவருக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இதனால் ஷங்கர் அடுத்தடுத்து இயக்க இருக்கும் படங்களிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. லைகா நிறுவனம் விடாப்பிடியாக சங்கரை சும்மா விடக்கூடாது என கங்கணம் கட்டி தொடர்ந்து அவரது அடுத்தடுத்த வேலைகளில் மூக்கை நுழைத்து தொந்தரவு செய்து வருகின்றனர்.

இதை கேள்விப்பட்ட தெலுங்கு நடிகர் ராம் சரண் இவருடன் ஒரு படம் பண்ணுவதற்கு சும்மாவே இருந்திருக்கலாம் என யோசிக்கும் அளவுக்கு டென்ஷனாகி விட்டாராம். இதனால் சங்கர் வரும்போது வரட்டும், அதற்கு முன் வேறு ஒரு படத்தில் நடித்து விடலாம் என முடிவு செய்துவிட்டாராம்.

தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும் ரத்தம் ரணம் ரௌத்திரம் படத்தில் நடித்து கொண்டிருக்கும் ராம்சரண் அடுத்ததாக சங்கர் படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்திருந்த நிலையில், ஷங்கருக்கு தொடர்ந்து பிரச்சினைகள் வருவதால் அவரை ஓரமாக தள்ளிவிட்டு தெலுங்கில் உள்ள கமர்ஷியல் இயக்குனருடன் விரைவில் கைகோர்க்க உள்ளாராம்.

shankar-ramcharan-cinemapettai
shankar-ramcharan-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்