சூர்யா பட நடிகையுடன் இணையும் யோகிபாபு.. அதிர்ஷ்டம் நாலாபக்கமும் அடிக்குது.!

ஆர்ஜே வாக தனது வாழ்க்கையை தொடங்கிய பாலாஜி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். தீயா வேலை செய்யணும் குமாரு, நானும் ரவுடி தான் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்த இவர் தற்பொழுது வீட்ல விசேஷங்க திரைப்படத்தினை மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருந்த N.J. சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார். இப்படம் ஹிந்தி காமெடி ட்ராமாவின் தமிழ் ரீமேக் ஆகும்.

இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களைத் தவிர சத்யராஜ், ஊர்வசி மற்றும் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தற்போது இப்படத்தில் நடிகர் யோகிபாபு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை போனிகபூர் பெற்றுள்ளதால் ZEE ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிதியுதவி அளித்துள்ளார். மேலும் இப்படத்தினை 40 நாட்களுக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்