யோகி பாபு காட்டில் பேய் மழை.. முடியாது என மறுத்தும் பயனில்லை

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக உள்ள காமெடி நடிகர் என்றால் யோகி பாபு தான். தற்போது வரும் முன்னணி நடிகர்களின் பெரும்பாலான படங்களில் யோகி பாபு தான் நகைச்சுவை நடிகராக உள்ளார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான மண்டேலா படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்போது யோகி பாபு கைவசம் 18 படங்கள் வைத்துள்ளார். இவ்வாறு நிற்கக் கூட நேரம் இல்லாத அளவிற்கு மிகவும் பிஸியாக உள்ளார். தன்னுடைய நகைச்சுவையால் இவர் ஹீரோவுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் வெளியாகும் படங்களில் இவர் இல்லாத படங்களை காண முடியாது. யோகி பாபு நடித்துவரும் பதினெட்டு படங்களில், 6 படங்களில் ஹீரோவாகவும் 12 படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார். மொத்தமாக பதினெட்டு படங்களில் நடிக்கிறார். யோகிபாபு எனக்கு டைம் இல்லை என்று கூறினாலும் நட்புக்காக ஒப்புக்கொண்ட படங்கள் இது என்று கூறுகிறார்.

தற்போது விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, விஷாலின் வீரமே வாகை சூடும் படங்களில் காமெடி ரோலில் நடித்துள்ளார். அனுசரண் இயக்கத்தில் பன்னிக்குட்டி, கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பூச்சாண்டி, சலூன், காசேதான் கடவுளடா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இது தவிர கடைசி விவசாயி, யானை, அயலான், பேதைமை, வீரப்பனின் கஜானா, ஒப்பந்தக்காரர் நேசமணி, பிஸ்தா, சுமோ, கருங்காப்பியம், கூகுள் குட்டப்பா, அந்தகன் போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது வரும் படங்களில் யோகிபாபு நடித்தாலே அந்தப் படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகிறது. இதனால் பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் யோகி பாபு நடிக்க வைக்க விரும்புகிறார்கள். இதனால் யோகி பாபு காட்டில் பண மழை பெய்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்