மாநாடு சிலம்பரசனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.. பிரமிக்கும் ஒய்.ஜி.மகேந்திரன்

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்தப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ் ஏ சந்திர சேகர், ஒய்.ஜி,மகேந்திரன்,  பிரேம்ஜி, கருணாகரன், மகத் ராகவேந்திரா மிக பெரிய என நட்சத்திர பட்டாளத்தை நடிக்க வைத்து பிரமிக்க வைக்கிறார் வெங்கட் பிரபு.

நடிகர் திலகம் சிவாஜி, ரஜினி, கமல் என ஒரே சமயத்தில் 3 ஜாம்பவான்களுடன் நகைச்சுவையில் கலக்கிய ஒய்.ஜி.மகேந்திரன் “மாநாடு” படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

சிலம்பரசனை நான் சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். அவருடன் இதற்கு முன் “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்” என்கிற படத்தில் நடித்திருந்தேன்.

yg mahendran
yg mahendran

அதேபோல சிம்புவுடன் பல காட்சிகளில் நடித்தாலும், படத்தில் நான் எஸ்.ஜே.சூர்யா தரப்பு ஆளாக வருகிறேன். “வாலி” பட சமயத்தில் இருந்தே எஸ்.ஜே.சூர்யா பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் இப்போது தான் அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். எங்களது காம்பினேஷன் பெரிய அளவில் பேசப்படும் எனக் கூறியுள்ளார்.

இதுவரை கிட்டத்தட்ட முன்னூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே, உடனே திரையில் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும். அந்த வகையில் “மாநாடு” படத்தின் கதையும் வித்தியாசமாக இருந்ததுடன் என்னுடைய கதாபாத்திரமும் சவால் நிறைந்ததாக இருந்தது என மாநாடு பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்