கவர்ச்சியில் யாஷிகாவை ஓரம்கட்டும் தங்கச்சி.. அதுக்குனு பாத்ரூம் புகைப்படம் ஓவரா இல்ல

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்து வந்தார்.

சமீபத்தில் யாஷிகா தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு இரவு பார்ட்டிக்கு சென்று இருந்தார். பார்ட்டி முடிந்து வீடு திரும்பும் போது அவருடைய கார் விபத்துக்குள்ளானது. அதில் அவருடைய நெருங்கிய தோழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அதை தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த யாஷிகாவை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது கொஞ்சம் “கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார்.

சமீபத்தில் கூட அவர் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் போட்டோ இணையதளத்தில் வைரல் ஆனது. பார்த்த ரசிகர்கள் பலரும் யாஷிகா விரைவில் குணமடைய வேண்டும் என்று தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.

osheen anand
osheen anand

இப்படி யாஷிகாவிற்காக ரசிகர்கள் பலரும் வருத்தத்துடன் இருக்கும் நிலையில் யாஷிகாவின் சொந்த தங்கை ஓசின் ஆனந்த் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இதை பார்க்கும் ரசிகர்கள் இவரை குட்டி யாஷிகா என்று வர்ணித்து தள்ளுகின்றனர். மேலும் ஒரு சிலர் உங்க அக்கா அங்க இடுப்பு உடைந்து படுக்கையில் கிடக்கும் போது உனக்கு இப்படி ஒரு கவர்ச்சி போஸ் தேவையாமா தங்கச்சி என்று அறிவுரை கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்