மீண்டும் சரக்கு அடிக்க தொடங்கி விட்டீர்களா.? ஒரே பதிவால் வசமாக சிக்கிய யாஷிகா!

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக போலி அக்கவுண்ட் தொடங்கப்படுகிறது. சினிமா பிரபலங்களை, கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர்களின் பெயர்களில் இணையத்தில் அதிகமாக போலி அக்கவுண்ட் தொடங்கப்படுகிறது.

அதேபோல் தற்போது அஜித்தின் மனைவி நடிகை ஷாலினியின் பெயரில் டுவிட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு இருந்தது.அந்த ட்விட்டர் கணக்கில் அஜித், ஷாலினி இருவரின் பழைய புகைப்படத்துடன் முதன்முதலாக ட்விட்டருக்கு வருகை தந்து உள்ளேன் என பதிவிட்டிருந்தது.

நடிகர் அஜித் எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை. அவருடைய முக்கிய அறிவிப்புகள், போட்டோக்கள் எல்லாமே அவருடைய பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தான் வெளியிடுவார். இந்நிலையில் தற்போது ஷாலினி தொடங்கப்பட்டுள்ள டுவிட்டர் கணக்கு போலியானது என சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அஜித் மட்டுமின்றி அவர் குடும்பத்தில் யாரும் சமூக வலைதளப் பக்கத்தில் இல்லை. ஷாலினியின் போலி கணக்கை பார்த்து உண்மையாகவே ஷாலினி டுவிட்டரில் இணைந்துள்ளார் என நினைத்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

yashika-twit-cinemapettai
yashika-twit-cinemapettai

அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் ஷாலினியின் ட்விட்டர் அக்கவுன்ட்டை பார்த்தவுடன் வெல்கம் மேம் என கமெண்ட் செய்துள்ளார். இதனால் யாஷிகா ஆனந்த் இது போலி அக்கவுண்ட் என தெரியாமலே ஷாலினிக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

இதனால் யாஷிகா ஆனந்த் பெரிய பல்ப் வாங்கி உள்ளார். அதுமட்டுமல்லாமல் குடித்துவிட்டு கமெண்ட் செய்திருக்கிறார் என பலரும் கலாய்த்து வருகிறார்கள். அஜித் ரசிகர்கள் கூட இது போலி அக்கவுண்ட் என தெரியாமல் கமெண்ட் செய்து வருகிறார்கள். இது உண்மையான ஐடி இல்லை என்பதை அஜித்தின் மேனேஜர் வெளிப்படையாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

suresh-chandra-twit
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்