யாஷிகாவின் தற்போதைய நிலை.. நெருங்கிய தோழி கூறிய பதில்

மகாபலிபுரம் சென்று வருகையில் கோர விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டிருக்கிறார்.

யாஷிகா ஆனந்த் தன் தோழி பவானி, சையது, அமீர் ஆகியோருடன் கடந்த சனிக்கிழமை இரவு கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் சூளேரிக்காடு பகுதியில் வந்தபோது அவரின் கார் விபத்துக்குள்ளானது. இதில் அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா சென்னையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Yashika1-Cinemapettai.jpg
Yashika1-Cinemapettai.jpg

இடுப்பு பகுதி மற்றும் வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதால் யாஷிகாவிற்கு அறுவை சிகிச்சைக்கள் செய்யப்பட்டது. காரை அவர் அதிவேகமாக ஓட்டியது தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து யாஷிகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Yashika2-Cinemapettai.jpg
Yashika2-Cinemapettai.jpg

அதுமட்டுமின்றி மருத்துவமனை சென்ற போலீசார் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த யாஷிகா ஆனந்த் தற்போது நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனை யாஷிகாவின் தோழி ஒருவர் வெளிப்படையாக அவரது உடல்நிலை பற்றியும் தற்போது அவர் நார்மல் வார்டுக்கு வந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார் மேலும் விபத்து ஏற்பட்ட சம்பவங்களை பற்றி விரிவாக இனிமேல் அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு விசாரணை நடத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -