கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா.. விட்ட இடத்தை பிடிக்க போறாங்களாம்

yashika-video

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் சில நடிகைகள் உள்ளனர். அப்படி நடிக்கும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். அவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

ஆரம்ப காலத்தில் ஒரு சில படங்களில் நடித்த இவருக்கு கௌதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஓவர் கிளாமராக யாஷிகா நடித்திருந்தார். இதனால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மிகவும் குட்டியான டிரஸ் அணிந்து கொண்டு வந்து ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.

கடமையை செய், ராஜபீமா, உத்தமன் போன்ற படங்களில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் அவருடைய நெருங்கிய தோழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகாவுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்றது. தற்போது யாஷிகா ஆனந்த் நான்கு மாதங்களுக்குப் பிறகு உடல் நலம் முழுமையாக குணம் அடைந்துள்ளார். விபத்துக்குப் பின்னர் அவர் முதல் முறையாக கையில் வாக்கிங் ஸ்டிக்கை வைத்துக்கொண்டு ஒரு கடை திறப்பு விழாவுக்கு வந்தார்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரல் ஆனது. அதனைத் தொடர்ந்து யாஷிகா மீண்டும் பழைய ஃபார்முக்கு இறங்கியுள்ளார். அதாவது நான் மீண்டும் வந்து விட்டேன் என்று காட்டும் விதமாக தன்னுடைய ஹாட்டான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தற்போது தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

யாஷிகா சில மாதங்களாக சினிமாவில் தான் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இவருடைய கிளாமர் போட்டோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவதால் ரசிகர்கள் மிகவும் குஷியாக உள்ளனர்.

yashikaanand
yashikaanand
Advertisement Amazon Prime Banner