கார் விபத்தில் உயிரிழந்த யாஷிகாவின் தோழி.. வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன பிறகு துருவங்கள் பதினாறு என்ற படத்தில் நடித்தார் இந்த படமும் பெரிய அளவு வெற்றி பெறாமல் ஓரளவு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

அதன்பிறகு யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓரளவுக்கு வரவேற்பை பெற்றார். அதுமட்டுமில்லாமல் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில சேட்டை செய்தாலும் ரசிகர்களிடம் வெறுப்பையும் பெற்றார்.

யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மிகவும் பிரபலமான அதன் பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

yashika anand friend valli shetty bhavani
yashika anand friend valli shetty bhavani

பின்பு நோட்டா, கழுகு 2 மற்றும் ஜாம்பி ஆகிய படங்கள் வெளியாகின இதில் எந்த படமும் அவருக்கு பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் இவருக்கு ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது தோழி வள்ளி செட்டி பவானி ஆகிய நண்பர்களுடன் மகாபலிபுரம் அருகே உள்ள சூளேரிகாடு பகுதியில் காரில் சென்று விபத்துக்கு உள்ளாகினர். இதில் சம்பவ இடத்திலேயே அவரது தோழி மரணம் அடைந்தார்.

தற்போது யாஷிகா ஆனந்த் மீது 3 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . அதிவேகமாக ஓட்டுதல் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டது என வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது ஸ்ரீகாந்தின் தோழியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது ரசிகர்கள் மனவருத்தத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -