இப்படியா கேவலப்படுத்துவது, மெடிக்கல் ரிப்போர்ட் பாருங்க.. கண்ணீர் விட்ட யாஷிகா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்றன, அதனால் தற்போது யாஷிகா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் இவன்தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய் மற்றும் சல்பர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. மேலும் தற்போது பட வாய்ப்புகள் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் சமீபத்தில் யாஷிகா ஆனந்த் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து கார் விபத்திற்கு உள்ளானார். சமீப காலமாக இந்த செய்திதான் சமூக வலைதளங்களில் பலராலும் பேசப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்டது நேரில் பார்த்த நபர்கள் கூறியதையே மீடியா வெளியிட்டுள்ளது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தற்போது வரை தெரியவில்லை. யாஷிகா வெளியிட்டுள்ள இந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் பலரும் யாஷிகா ஆனந்த் குடிபோதையில் ஓட்டியதால், விபத்து ஏற்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதற்கு யாஷிகா ஆனந்த் நான் குடிபோதையில் ஒட்டியிருந்தால் எப்படி என்னை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து இருப்பார்கள் என விளக்கம் அளித்துள்ளார்.

yashika anand
yashika anand

மேலும் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான தகவல் வெளியாகி வருவதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது சமூக வலைதள பக்கத்தில் போலியாக செய்திகளை கூறுபவர்களை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.

காவல்துறையின் ரிப்போர்ட்டில் கூட தாங்கள் மது அருந்தவில்லை என்பது போன்று தான் பதிவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் பொய்யான செய்திகளை வெளியிட்டுயுள்ள மீடியா மீது வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன்பு இதே போன்றகுடிபோதையில் விபத்து ஏற்படுத்திய ஆசைக்காய் என்று புரளியை கிளப்பியது மிகவும் வேதனையாக இருப்பதும் இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது போன்றும் யாஷிகா பதிவிட்டுள்ளார்.

டாக்டரிடம் இருந்து பெறப்பட்ட மெடிக்கல் ரிப்போர்ட்டை விரைவில் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது யாஷிகா ஆனந்த் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் மற்றொரு தரப்பினர் அவருக்கு உடல்நலத்தைப் பற்றி விசாரித்து வருகின்றனர்.

யாஷிகாவின் தற்போதைய நிலை:

yashika-health-condition
yashika-health-condition
- Advertisement -