கை நழுவும் யாஷிகாவின் படங்கள்.. தயாரிப்பாளர்கள் எடுத்த அதிரடி முடிவு.

தமிழ் சினிமாவின் இளம் நடிகையான யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பிரபலமானார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார். தற்போது ஒரு சில புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.

இந்நிலையில் யாஷிகா, அவரின் தோழி வள்ளி செட்டி பவானி மற்றும் ஆண் நண்பர்களுடன் புதுச்சேரியில் ஒரு விருந்தில் கலந்து விட்டு சென்னைக்கு காரில் திரும்பும்போது, மாமல்லபுரம் அருகில் விபத்தில் சிக்கினார்கள்.

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகாவும் அவருடன் காரில் பயணித்த 2 ஆண் நண்பர்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

yashika-photo
yashika-photo

மேலும் படுகாயம் அடைந்துள்ள யாஷிகா ஒரு சில அறுவை சிகிச்சைக்குப்பின் அவர் வீட்டிலேயே ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், அவர் பழைய நிலைக்கு திரும்ப ஒரு வருடம் ஆகலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் யாஷிகா ஆனந்தை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். படங்கள் பாதியில் நிற்பதால், யாஷிகா ஆனந்துக்கு பதில் வேறு நடிகையை நடிக்க வைக்கலாமா? என யோசித்து வருகிறார்கள்.

யாஷிகா ஆனந்த் தற்போது இவன்தான் உத்தமன், ராஜபீமா, கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்களில் நடித்து வந்ததாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர்களின் முடிவால் இந்த படங்கள் அனைத்தும் யாஷிகா ஆனந்த் கையை விட்டு செல்லும் நிலை உருவாகி உள்ளது.

- Advertisement -