வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மீண்டும் தரமான கம்பேக் கொடுத்த ஹரி.. அருண் விஜய்யின் யானை முதல் நாள் வசூல்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், சஞ்சீவ், போஸ் வெங்கட் ஆகியோர் நடிப்பில் வெளியான யானை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருந்தார்.

எப்போதும் போல கமர்சியல் கலந்த ஆக்ஷன் படமாக ஹரி யானை படத்தையும் கொடுத்திருந்தார். குடும்பத்தை தாங்கும் வெயிட்டான கதாபாத்திரமாக அருண்விஜய்க்கு அமைந்திருந்தது. கதாநாயகி பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார் என மற்ற நடிகர், நடிகைகள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து இருந்தனர்.

மேலும் இந்த வாரம் பெரிய நடிகர்களின் படங்களும் யானை படத்திற்கு போட்டியாக வெளியானது. ஆனால் மற்ற படங்களை காட்டிலும் யானை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அதிக வசூல் செய்து வருகிறது. மேலும் அருண் விஜய் யானை படத்தை தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஆனால் யானை படத்தின் வெற்றிக்கு பிறகு தான் அடுத்தடுத்த படங்களை வெளியிட வேண்டும் என அருண் விஜய் திட்டமிட்டு இருந்தார். அந்தளவுக்கு யானை படத்தின் மீது அருண் விஜய்யை வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அதாவது யானை படம் உலகம் முழுவதும் 5கோடி வசூல் வேட்டையாடி உள்ளது.

அதுமட்டுமன்றி தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 4 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளே இவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் யானை படம் தொடர்ந்து நேர்மையான விமர்சனங்களை பெற்று வருவதால் குடும்பம் குடும்பமாக திரையரங்குகள் நோக்கி படையெடுக்கின்றனர். மேலும் யானை படத்தின் வெற்றி மூலம் தொடர்ந்து ஹரி மற்றும் அருண்விஜய் இருவருக்குமே பட வாய்ப்புகள் வர வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -

Trending News