ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கேவலமான கேரக்டரை மாற்றாத விராட் கோலி.. கேப்டன் பதவியை பறித்தாலும் திருந்தாத செயல்கள்

விராட் கோலி மைதானத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் ஒரு கிரிக்கெட் வீரர். இவர் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் இவருடைய கேரக்டர்கள் மற்ற நாட்டு வீரர்கள் வெறுத்து ஒதுக்கும் ஒன்றாக இன்று வரை  பார்க்கப்படுகிறது.

மைதானத்தில் கெட்ட வார்த்தை பேசுவது, அசிங்கமாக எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வது போன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவார் விராட் கோலி . இப்பொழுதும் கூட அந்த மாதிரி ஒரு சர்ச்சையில் சிக்கி தன் பெயரை கெடுத்துக் கொண்டு வருகிறார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை ஸ்லெட்ஜிங் செய்துள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 416 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் தடுமாறியதால் போட்டி இங்கிலாந்து கையில் இப்பொழுது இருக்கிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி  90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கும் போது விராட் கோலி, ஜானி பேர்ஸ்டோவை ஸ்லெட்ஜிங் செய்ய, அதன்பின் ஆக்ரோஷத்தில் உச்சத்துக்கு சென்ற பேர்ஸ்டோ இந்தியாவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

அவர் பங்கிற்கு 106 ரன்கள் குவித்தார். புஜாரா போல் பேட்டிங் செய்த அவரை ஆபாசத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று ரிஷப் பந்த் போல் அதிரடி ஆட்டம் ஆர்டர் செய்தார் விராட் கோலி. இதனால் இங்கிலாந்தின் ரன் வேகம் அதிகரித்து இந்திய அணிக்கு தலைவலியை உண்டு பண்ணியது. அதுமட்டுமில்லாமல் இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் விக்கெட்டை இந்திய அணி கைப்பற்றியதும் மைதானத்திலேயே நடனமாடி மிகவும் கேவலமாக நடந்து கொண்டார்.

விராட் கோலி எப்பொழுது தான் இந்த ஸ்லெட்ஜிங் செய்வதை நிறுத்துவார் என்று தெரியவில்லை. எல்லா நாட்டினரையும் அவர் எரிச்சல் அடைய வைக்கிறார். எல்லா வீரர்களும் இதனால் விராட் கோலியை வெறுத்து ஒதுக்கும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது.

- Advertisement -

Trending News