உலக சாதனை படைத்த கே.ஜி.எஃப் 2 டீசர்..

கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் படம் அனைத்து மொழிகளிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து இயக்குனர் பிரசாந்த் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார்.

நடிகர் யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

விஜய்யின் மாஸ்டர், ஆர்ஆர்ஆர், சர்கார் மற்றும் மெர்சல் படங்களின் டீசர்கள் முதல்நாளில் குவித்த லைக் சாதனைகளையெல்லாம் கே.ஜி.எஃப் 2 முறியடித்து விட்டது. ஆம் டீசர் வெளியான முதல் நாளில் 3 மில்லியன் லைக்குகளை குவித்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில், கேஜிஎஃப் 2 டீசர் இதுவரை 200 மில்லியன் பார்வைகளையும், 1 மில்லியன் கமெண்ட்ஸ்களையும், 8 மில்லியன் லைக்ஸ்களையும் கடந்துள்ளதாக அதன் இயக்குனர் பிரசாந்த் நீல் அவரது ட்விட்டர் பக்கத்தில் பெருமையோடு பகிர்ந்திருக்கிறார்.

மேலும் உலகில் இதுவரை வெளியான படங்களில் 8 மில்லியன் லைக்ஸ்களைக் குவித்த முதல் டீசர் என்ற பெருமை ‘கேஜிஎஃப் 2’ படத்திற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

kgf yash
kgf yash
- Advertisement -