வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பெற்ற பிள்ளைக்கு தொந்தரவு கொடுக்கும் சிறுத்தை சிவா தம்பி.. குடிபோதையில் செய்யும் அலப்பறை

தென்னிந்திய மொழி படங்களில் நடித்து புகழ்பெற்ற பாலா, மலையாளத்தில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகி அம்ருதாவை காதலித்து வந்தார். இவர்களின் திருமணத்துக்கு பாலாவின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்ற கூறப்பட்ட போதும், அதை பொருட்படுத்தாமல் கடந்த 2010 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்தனர்.

இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி தான் நடிகர் பாலா. இவர் அன்பு எனும் படத்தில் அறிமுகமாகி, காதல் கிசு கிசு, என்று பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் அம்ருதா மீது காதல் வயப்பட்டார். விழுந்து விழுந்து காதல் செய்து அம்ருதாவை கரம் பிடித்தார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், பாலா குடித்துவிட்டு தொடர்ந்து காதல் மனைவியை தொந்தரவு செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு கட்டத்தில் இனி சேர்ந்து வாழவே முடியாது என்று முடிவெடுத்த இருவரும், 2019 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர்.

இதை தொடர்ந்து பாலா இரண்டாவது திருமணமும் செய்தார். ஆனால், அதற்க்கு பிறகும் முதல் மனைவிக்கு அவ்வப்போது தொந்தரவு கொடுத்த வண்ணமாகவே இருந்தார்.

பெற்ற பெண் பிள்ளையிடம் தகராறு

ஒரு கட்டத்தில் எல்லை மீறியதால் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடவந்திரா காவல் நிலையத்தில் அம்ருதா புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறார் என்றும், தன்னை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொள்கிறார், மேலும் தனது 12 வயது மகளை பல்வேறு இடங்களில் இடைமறித்து அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கடந்த 12 ஆம் தேதி நடிகர் பாலா மற்றும் அவரின் மேலாளர், பிலிம் பேக்டரி நிறுவனர் ஆனந்த் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், முதலில் இவர் தொடர்பான தகவல் வெளிவராத நிலையில், தற்போது இவர் சிறுத்தை சிவாவின் ஆசை தம்பி என்று தெரிய வந்துள்ளது.

என்ன சார் இதையெல்லாம் கண்டிக்க மாட்டீங்களா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News