நம்பிக்கை இல்லாமல் 20 லட்சத்தை பாக்கி வைத்த தயாரிப்பாளர்.. சூர்யா செய்த தரமான சம்பவம்

லோகேஷின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு சூர்யாவை நடிப்பு அரக்கனாகவே பார்க்கின்றனர். இவர் இப்பொழுது சினிமாவில் ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறார். ஆனால் சூர்யா ஆரம்ப காலகட்டத்தில் ஒரு ஹிட் படம் கொடுப்பதற்கே படாத பாடுபட்டார்.

1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கிய சூர்யாவிற்கு, 2001 ஆம் ஆண்டு வெளியான நந்தா திரைப்படம் தான் அவருடைய சினிமா கெரியருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. நந்தா படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை சூர்யாவிற்கு மார்க்கெட்டே இல்லை.

Also Read: சூர்யா மும்பையில் வீடு வாங்க இதுதான் காரணம்.. ஜோதிகாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

அவருடைய படங்களும் அவ்வளவாக பிசினஸும் ஆகாது. அப்படி இருக்கையில் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படம் மூலம் சினிமாவில் ஒரு பிரேக் கொடுத்தார். பின்பு உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன், மாயாவி போன்ற அடுத்தடுத்த ஹிட் படங்களை சூர்யா கொடுத்துக் கொண்டிருந்தார்.

அதன்பின் 2005 ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் சூர்யாவை வைத்து கஜினி படம் எடுத்தார். இந்த படம் நடிக்கும் போது சூர்யாவிற்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் கிடையாது. அதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் சேலம் A. சந்திரசேகருக்கு சூர்யா மீது நம்பிக்கையே இல்லை.

Also Read: சிம்ரனுக்காக மேனேஜர் வேலையை விட்டு வந்த சூர்யா.. முதல் பட ரகசியத்தை உடைத்த குணசேகரன்

படத்தின் சம்பளத்தை கூட 20 லட்சம் பாக்கி வைத்து விட்டார். ஆனால் முழு சம்பளத்தையும் கொடுக்கவில்லை என சூர்யா கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்தால் போதும் என்று தன்னையே வருத்திக்கொண்டு முழு முயற்சியுடன் நடித்தார்.

கடைசியில் அந்த படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து தரமான சம்பவம் செய்தார். அதன் பிறகு அந்த படத்தின் தயாரிப்பாளர் பாக்கி வைத்த 20 லட்சத்தை சூர்யாவிற்கு மிகுந்த குற்ற உணர்ச்சியுடன் எடுத்துக் கொடுத்தார் . அது மட்டுமல்ல கஜினி திரைப்படம் சூர்யாவிற்கு மாபெரும் பெயரை பெற்று தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: இப்பதாங்க இவரு டம்மி.. யாராலயும் யோசிக்க முடியாத ஏ.ஆர்.முருகதாஸின் 5 ஹிட் படங்கள்

Next Story

- Advertisement -