லியோ பாக்ஸ் ஆபிஸை பிடிக்க கைமாறிய பெட்டி.. பின்னணியில் இருக்கும் கருப்பு ஆடு, கவனிப்பாரா விஜய்.?

Leo Box Office- Vijay: லியோ வெளிவருவதற்கு முன்பே எந்த அளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கியதோ அதற்கு தலைகீழாக இப்போது நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. படம் வெளியான நாளிலிருந்து சில சர்ச்சைகளை சந்திக்க தொடங்கிய நிலையில் இப்போது பாக்ஸ் ஆபிஸை பிடிக்க கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் திரையரங்கு சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது ஓவர் சீஸை பொருத்தவரையில் தயாரிப்பாளர் லலித் ஏகப்பட்ட மோசடி செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எப்படி என்றால் தியேட்டர் ஹவுஸ்புல் ஆக இருக்கிறது, வசூல் கொட்டுகிறது என்பதை நிரூபிக்கும் பொருட்டு இவர் தரப்பில் இருந்தே பல டிக்கெட்டுகள் புக் செய்யப்படுகிறதாம்.

இதற்காக அவர் ஒன்றல்ல இரண்டல்ல 5 கோடி வரை செலவழித்திருக்கிறார். இப்படி பெட்டி பெட்டியாக பணத்தை கைமாற்றி வசூலில் சில முறைகேட்டை செய்துள்ளதாக திருப்பூர் சுப்ரமணியம் வெறுப்புடன் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி இது போன்ற தகவலை அவர் வெளியிடுவதை பார்த்த லலித் அவரை அழைத்து எதற்காக இப்படி எல்லாம் பேட்டி கொடுக்கிறீர்கள் என்று வசை பாடி இருக்கிறார்.

இதெல்லாம் எதற்காக என்று பார்த்தால் ஜெயிலர் வசூலை முறியடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஏற்கனவே படம் வெளிவருவதற்கு முன்பே இப்படி ஒரு கருத்து வைரலாக பரவி வந்தது. அதை லலித் லோகேஷிடம் கூட கூறியதாக அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியிருந்தார். இதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட அழுத்தமும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வந்ததாக கூட செய்திகள் வெளிவந்தது.

தற்போது திருப்பூர் சுப்பிரமணியம் கூறிய விஷயத்தை பார்த்தால் இதற்கு பின்னணியில் இருக்கும் கருப்பு ஆடு தயாரிப்பாளர் தான் என்பது தெளிவாக தெரிகிறது. இப்படி அவர் இஷ்டத்திற்கு ஒரு பாக்ஸ் ஆபிஸ் வசூலை கணக்கு காட்டி மீடியாவை பரபரப்பாக்குவதற்கு முக்கிய காரணம் அடுத்த படத்தையும் விஜய்யை வைத்து தயாரிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் தான்.

அவருடைய இந்த பேராசை தற்போது பல சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இப்படி லியோவை சுற்றி நடக்கும் அக்கப்போர் அனைத்தும் விஜய்யின் கவனத்திற்கு செல்கிறதா அல்லது திட்டமிட்டு மூடி மறைக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை. ஆனாலும் அவர் இந்த விவகாரத்திற்கு உடனடி தீர்வு கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆக மொத்தம் லியோ வசூல் அம்புட்டும் தயாரிப்பாளரின் பிளான் என்பது இப்போது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.