நிறைவேறுமா ராஜமௌலியின் கனவு.? சர்வதேச அளவில் 14 பிரிவுகளில் போட்டி போடும் ஆர்ஆர்ஆர்

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று கோடிக்கணக்கில் வசூல் லாபம் பார்த்தது.

அந்த வகையில் 550 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் 1200 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. மேலும் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

Also read : 500 கோடி கொட்டியும் செலக்ட் ஆகாத ஆர்ஆர்ஆர்.. ஆஸ்காருக்கு தேர்வான ஒரே மினி பட்ஜெட் இந்தியன் மூவி

அது மட்டுமல்லாமல் இப்படி ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கிய ராஜமௌலிக்கும் வாழ்த்துக்கள் குவிந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் பங்கேற்க இருக்கிறது. ஏற்கனவே படம் வெளியான சமயத்தில் ரசிகர்கள் உட்பட பலரும் இந்த திரைப்படம் நிச்சயம் ஆஸ்கர் விருதை வெல்லும் என்று கூறி வந்தனர்.

அந்த வகையில் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 14 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அதன் அடிப்படையில் சிறந்த இயக்குனர், நடிகர், துணை நடிகை, துணை நடிகர், பாடல், திரைக்கதை, எடிட்டிங் உள்ளிட்ட 14 பிரிவுகள் அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

Also read : 500 கோடி பட்ஜெட்டுடன் களமிறங்கும் ராஜமௌலி.. 1000 கோடிக்கு லாபத்தை எதிர்பார்க்கும் நடிகர்

திரை உலகில் ஒவ்வொருவருக்கும் இந்த விருதை பெற வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கிறது. அந்த வகையில் வருட கணக்கில் கடுமையான உழைப்பை கொடுத்து உருவாக்கிய இந்த திரைப்படம் ஆஸ்கரை நோக்கி செல்வதில் படக்குழுவினர் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

மேலும் தற்போது பரிந்துரைக்கப்பட்ட 14 பிரிவுகளில் எப்படியும் இந்த திரைப்படத்திற்கு விருது கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. அந்த வகையில் ராஜமௌலியின் இந்த ஆஸ்கர் கனவு நிறைவேறுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read : ஓவர் பந்தா பண்ணிய நடிகை.. ஆளையே மாற்றி தூள் கிளப்பிய ராஜமௌலி