கமல், சூர்யா லியோ படத்தில் நடிப்பார்களா?. விஜய் போட்ட கண்டிஷனால் குழம்பி போன லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை லலித் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் ஆயுத பூஜை பண்டிகைக்காக இப்படம் தயாராகி வருவதால் இப்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. லோகேஷ் எல்சியுவில் லியோ படம் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் விக்ரம் படத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருந்தது. அதுமட்டுமின்றி கார்த்தியின் குரல் மட்டும் பயன்படுத்தி இருந்தார்கள்.

Also Read : விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தூக்கி எறிய சாய்பல்லவி கூறிய காரணம்.. வாய்ப்பில்ல என்றாலும் வாய்க்கொழுப்பு அதிகம்

இந்நிலையில் லியோ படத்தில் கமல், கார்த்தி, சூர்யா போன்ற பிரபலங்கள் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பொதுவாக விஜய் ரஜினியை போல தன்னுடைய படத்தில் அவர் மட்டும்தான் ஹைலைட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர். இப்போது லியோ என்றால் அது விஜய்யின் படம் தான்.

இதில் கமல், சூர்யா போன்ற நடிகர்கள் நடிக்க விஜய் சம்மதிக்க மாட்டார் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் விக்ரம் படத்தில் கமல் லோகேஷுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். கதை, திரைக்கதை, நடிகர், நடிகைகள் என எதிலுமே கமலின் தலையீடு இல்லை. முழுக்க முழுக்க லோகேஷின் படமாக எடுக்கப்பட்டிருந்தது.

Also Read : விஜய்யை ஓரங்கட்டி வெற்றி கண்ட தனுஷ்.. சைலன்ட்டாக காரியத்தை சாதித்த வாத்தி

மேலும் கமலின் தலையீடு இல்லாத காரணத்தினால் தான் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது என்று கூறப்பட்டது. ஆனால் விஜய் கதையில் மாற்றம் கூறாமல் இருந்தாலும் மற்ற டாப் நடிகர்களை தன்னுடைய படங்களில் நடிக்க சம்மதிக்க வில்லையாம். லோகேஷ் இதற்காக பல வேலைகள் செய்தும் விஜய் இடம் செல்லுபடி ஆகவில்லையாம்.

ஆகையால் லியோ படம் முழுக்க முழுக்க விஜய்யின் படமாக தான் எடுக்க உள்ளார்கள். அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்த படத்தில் நிறைய வில்லன்கள் உள்ளனர். சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின் போன்றவர்கள் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் லியோ படத்தில் ரோலக்ஸ் இடம் பெற வாய்ப்பு இல்லை.

Also Read : அண்ணன் விஜய்யின் பார்முலாவை காப்பி அடிக்கும் லோகேஷ்.. போட்டி போட்டு பணத்தை வாரி இரைக்க திட்டம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்