நான் கூப்பிட்டா தான் அவரு வருவாரா? லியோ ஆடியோ லான்ச்சுக்கு குட்டி கதையை பட்டை தீட்டும் விஜய்.!

ஜெய்லரின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் நிலையில் தற்போது லியோ படத்தின் அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வெளிநாடுகளில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தயாரிப்பாளர் லலித் கண்டிப்பாக தமிழ்நாட்டில் தான் நடக்கும் என்று உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டாருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தளபதி விஜய் மேடையில் என்ன குட்டி கதை பேச போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. ரஜினிக்கும் விஜய்க்கும் உள்ள பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர புது யோசனையில் படக்குழு
ரஜினியை ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு கூப்பிடலாம் என்று பட குழு முடிவு எடுத்துள்ளது.

Also Read : ஜெயிலரின் ஒரு மாத வசூலை வெளியிட்ட ஹாலிவுட் பத்திரிக்கை.. ஜவானை பின்னுக்கு தள்ளிய ரஜினி

இதனால் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமலஹாசன் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. படக்குழு சார்பாக ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஜினி தரப்பிலிருந்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லையாம். ரஜினியும் அமைதி காத்து வருகிறாராம். ஒருவேளை விஜய் மனது வைத்து ரஜினி சந்தித்து கூப்பிட்டால் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் விஜய் அதை செய்ய மாட்டார் என கூறப்படுகிறது.

அப்படி ரஜினி கலந்து கொள்வதாக இருந்தால் விஜய் மற்றும் ரஜினிக்கு இடையே உள்ள சர்ச்சையான சண்டைகள் முடிவுக்கு வரும். சில அரசியல் புள்ளிகள் இவர்கள் இருவரையும் சேர விட மாட்டார்கள் இவர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாம் என்று கழுகு போல் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழ் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் இவர்கள் இருவரும் இணைந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

Also Read : லோகேஷ், ரஜினி படத்திற்கு எதிராக தயாராகும் தரமான படம்.. சன் பிக்சர்ஸ் செய்த துரோகத்தால் ஏற்பட்ட விளைவு

எது எப்படியோ லியோ படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வரும் என்று தயாரிப்பாளர் லலித் கூறியது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. முதல் பாதி பார்த்த விமர்சனத்தை பொது இடத்தில் தெரிவித்த லலித்தின் ஆர்வக்கோளாறு சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த விமர்சனத்தால் லோகேஷ் சற்று அப்செட்டில் இருப்பதாகவும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு ஆடியோ வெளியீட்டு விழாவில் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். வெளிநாடு சென்றிருந்த தளபதி விஜய் இன்று சென்னை திரும்பியுள்ளார் அரசியல் ஒருபுறம் திரையுலகம் மறுபுறம் என்று போராடி வருகிறார் விஜய். ரஜினிக்கும் விஜய்க்கும் உள்ள சண்டை தொடருமா, இல்லை முடிவுக்கு வருமா என்பது இதில் தெரிய வரும்.

Also Read : அஜித், விஜய், ரஜினியை கிழித்து தொங்கவிட்ட செந்தில்.. இந்த துணிச்சல் யாருக்குமே வரலையே!

- Advertisement -