அரசியல் களத்தில் சூடு பிடிக்க போகும் விஜய் மக்கள் இயக்கம்.. தளபதியின் கொள்கையை ஏற்பாரா அஜித்.?

Ajith meets vijay in Azerbaijan: துணிவு படத்தை அடுத்து அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி வேகமாக ரெடியாகி வருகிறது. இப்படத்தின் சூட்டிங்கிற்காக  பட குழுவினர் அசர்பைசானில் முற்றுகையிட்டு உள்ளனர். படப்பிடிப்பு தாமதமாக தொடங்கியதை அடுத்து அஜித்திற்கான கால்ஷீட் குறைவாக உள்ளதால் சூட்டிங்கை மும்முரமாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வெங்கட் பிரபு தனது அடுத்த படமான விஜய் 68-காக லொகேஷன் தேடிய நிலையில் அவரும் அசர்பைசாணை செலக்ட் செய்தார். வெங்கட் பிரபுவின் இந்த லொகேஷன் செலக்சன் கோஇன்சிடென்ட்டா நடந்ததோ அல்லது வேண்டுமென்றே நடந்ததோ என்று தெரியவில்லை.

இச்செய்தி அஜித்தின் காதுகளுக்கு செல்ல அவர் சூட்டிங்கை அசர்பைசானில் இருந்து துபாய்க்கு மாற்றி விடலாமா என்று யோசிக்கும்படி தகவல் வர ஆரம்பித்தது. விஜய் வந்தால் நாம் ஏன் போக வேண்டும் என்ற கோணத்தில் யோசித்தாரோ என்னவோ படக் குழுவினரின் சவுகரியத்திற்காக துபாயில் வேண்டாம் அசர்பைசானில் வைத்துக் கொள்ளலாம் என்று அஜித் சொல்லிவிட்டார். பருத்தி மூட்டை மாற்றப்படாமல் கடைசியில் குடோனிலே உள்ளது.

Also read: அஜித்துடன் படம் பண்ண போட்டி போடும் 5 இயக்குனர்கள்.. மீண்டும் விக்னேஷ் சிவன் போட்ட அப்ளிகேஷன்

இறுதியாக விஜய் மற்றும் அஜித்தின் படங்களுக்கான ஷூட்டிங் ஸ்பாட் அசர்பைசான் என பிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சூட்டிங் ஸ்பாட் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக இருவரும் சந்தித்து பிரியாணி பரிமாறி கொள்வது வழக்கம். திரை நட்சத்திரங்கள் பலரும் இருவருக்கும் இடையே நின்று புகைப்படம் எடுத்து தங்கள் வலைதளங்களில்  பெருமையோடு பதிவிட்டு வருவது வாடிக்கையான விஷயம்.

ஆனால் தற்போது விஜய்யின் அரசியல்பிரவேசத்தை முன்னிட்டு இந்த சந்திப்பு ரசிகர்கள் மட்டுமின்றி  தமிழக மக்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது. எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் காம்பினேஷன் போல் ஒருவர் அரசியலில் நுழைவதும் ஒருவர் அதற்கு சப்போர்ட் பண்ணுவதும் என காலம் காலமாக எழுதப்படாத சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

மேலும் கலைஞர் 100 நிகழ்ச்சியில் இவர்கள் சந்திப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னமே நிகழ்ந்து விடும் என்பது போல் உள்ளது இந்நிகழ்வு. மக்கள் ரசிகர்கள் அரசியல் பிரமுகர்கள் என அனைவருமே விஜய் மற்றும் அஜித் இவர்கள் சந்திக்கும் தருணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர் இவர்களின் சந்திப்பு அரசியல் களத்தில் சூடு பிடிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

Also read: லியோ போல் செய்ய வேண்டாம்.. விடாமுயற்சிக்கு அஜித் போட்ட கட்டளை