லட்சங்களை அள்ளி வீசிய தல அஜித்.. அமைதிகாக்கும் தளபதி விஜய்?

தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என அழைக்கப்படும் விஜய் மற்றும் அஜீத் ஆகிய இருவரும் தங்களுடைய படங்களின் படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகின்றனர்.

தமிழ்நாடு தற்போது கொரோனா துன்பத்தில் சிக்கி மீள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரபலங்களிடம் நிதி உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பெரிய பிரபலங்களும் தங்களால் முடிந்த அளவு உதவி செய்து வருகின்றனர். அதில் சூர்யா மற்றும் சிவகுமார் குடும்பம் ஒரு கோடி, ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ஒரு கோடி என தன் பங்குக்கு நிதியுதவி செய்துள்ளனர்.

அதேபோல் தல அஜித் அரசாங்கத்திற்கு 25 லட்சமும், சினிமா பெப்ஸி யூனியன் தொழிலாளர்களுக்கு 10 லட்சம் என மொத்தம் 35 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது அனைவரது பார்வையும் தளபதி விஜய் மீது திரும்பியுள்ளது.

விஜய் எப்போதுமே அவசரப்பட்டு முதலில் நன்கொடை கொடுக்க மாட்டார் என்பது அவரை சார்ந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை கலந்து ஆலோசித்து அதற்கு தகுந்தவாறு நன்கொடை செய்வார்.

போன முறை கூட மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பணம் கொடுத்துவிட்டு, தன்னுடைய ரசிகர் மன்ற முக்கிய நபர்கள் பலருக்கும் நேரடியாக பணம் செலுத்தி தங்களுடைய ஏரியாவில் உள்ளவர்களுக்கு உதவி செய்யுமாறு செய்திருந்தார். அதேபோல் இந்த முறையும் செய்வாரா? இல்ல அஜித் போல் நேரடியாக அரசாங்கத்திடம் கொடுப்பாரா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

ajith kumar suresh chandrasekar
ajith kumar suresh chandrasekar
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்