போலீசை தாக்கும்படியான படங்கள் எடுப்பது ஏன்?. உண்மையை கூறிய வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறனின் படங்கள் எல்லாமே வெற்றி பெறுவதற்கான காரணம், ஒரு கதையின் ஆழத்தை உணர்ந்து படத்தை எடுத்திருப்பார். தற்போது சூரியை வைத்து விடுதலை படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்த சூழலில் விடுதலை படமும் போலீஸ் கதை களத்தை கொண்டுள்ளது. இந்த படத்திலும் என்கவுண்டர் பற்றி சொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவருடைய விசாரணை படத்திலும் காவல்துறையின் அடக்குமுறைகள் காண்பிக்கப்பட்டது.

Also Read : அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் தனுஷின் ஐந்து பார்ட் 2 படங்கள்.. வெற்றிமாறனுக்கு மட்டும் ஒரு வருடம் கால்ஷீட்

வெற்றிமாறன் இயக்கம் மற்றும் தயாரிக்கும் படங்களில் பெரும்பாலும் காவல்துறையை தாக்கும் படியாக விஷயங்கள் வைக்கப்படுகிறது. சமீபத்தில் வெற்றிமாறனிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதாவது குறிப்பாக காவல்துறையை மட்டும் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

பொதுவாக மக்கள் மீது ஒரு அமைப்பின் ரீதியாக ஒடுக்கு முறைகள் நடத்தப்படுவது அதிகம் காவல்துறையினால் தான். ஆகையால் தான் இது போன்ற படங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதாக வெற்றிமாறன் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Also Read : பொல்லாதவன் கிளைமாக்ஸ் இந்த படத்தின் காப்பி தான்.. மட்டமான வேலையால் வருந்திய வெற்றிமாறன்

மேலும் அதில் தன்னுடைய விடுதலை படபிடிப்பு நிறைவு பெற்றதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். வெற்றிமாறன் விடுதலை படத்தை முடித்த கையோடு சூர்யாவின் வாடிவாசல் படத்தை எடுக்க உள்ளார்.

மேலும் வெற்றிமாறன் வாடிவாசல், பேட்டைகாளி போன்ற தமிழர்களின் பெருமை சாற்றும் ஜல்லிக்கட்டை மையமாக எடுத்து வரும் படங்களை மக்களுக்கு கொண்டு செல்வதிலும் ஆர்வமாக இருக்கிறார். தொடர்ந்து வெற்றியை மட்டுமே கொடுத்து வரும் வெற்றிமாறனின் விடுதலை படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Also Read : 10 கோடியை அசால்ட்டாக வசூலித்த வெற்றிமாறன்.. 15 வருடங்கள் ஆகியும் No.1 ட்ரெண்டான படம்

- Advertisement -