ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நாங்கல்லாம் குளிக்கவே மாட்டோம்.. குளிப்பது பாவம்.. இது தான் தெய்வீகம்..

பொதுவாக ஜெயின் அதாவது சமண மதத்தை சேர்ந்தவர்கள், அசைவம் சாப்பிடமாட்டார்கள். ஏன் கிழங்கு வகைகள், பால், போன்றவற்றை கூட உட்கொள்ள மாட்டார்கள். veganism தான் follow செய்வார்கள். இந்த நிலையில், அவர்கள் எந்த உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்த கூடாது என்று மிகவும் கட்டுப்பாட்டுடன் வாழ கூடியவர்கள்.

சமணத்தில் ஸ்வேதாம்பர மற்றும் திகம்பர ஆகிய இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன. இரு பிரிவைச் சேர்ந்த சாதுக்களும் தீட்சை எடுத்தபிறகு கட்டுப்பாடான வாழ்க்கையை நடத்துகிறார்கள். திகம்பர சாதுக்கள் ஆடை அணிவதில்லை என சொல்லப்படுகிறது.

ஆனால் ஜெயின் பிரிவைச் சேர்ந்த சாத்விகள் கண்டிப்பாக புடவை வடிவில் வெள்ளைத் துணியை அணிவார்கள். கடும் குளிரிலும் அவர்கள் ஒரே மாதிரியான ஆடைகளை அணிவார்கள்.

இந்த துறவிகள், கடும் குளிரானாலும், மழையானாலும் வெறும் தரையில் தான் படுத்து உறங்குவார்கள். மேலும் இவர்கள் கம்மியான நேரம் தான் தூங்குவார்கள். இந்த நிலையில் இவர்கள் வினோதமான ஒரு நம்பிக்கையை கொண்டுள்ளார்கள். அது பலருக்கும் வியப்பையே கொடுத்துள்ளது.

குளிப்பது பாவம்

ஜெயின் துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் தீட்சை எடுத்த பிறகு குளிக்கவே மாட்டார்களாம். அது உண்மை. அவர்கள் குளித்தால், நுண்ணுயிர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கை.

அப்போ மூச்சு விடும்போதும், உங்கள் வாயில் இருக்கும் உமிழ்நீரில் பல நுண்ணுயிர்கள் இருக்குமே, அவை மட்டும் பாவமில்லையா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் இவர்கள் நுண்ணியிரிகள் கூட உடலுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டார்களாம்.

எப்போதும் தங்கள் வாயில் ஒரு துணியை வைத்திருப்பார்கள், இதனால் எந்த நுண்ணுயிரிகளும் வாய் வழியாக உடலை அடையாது என நம்புகின்றனர். மேலும் அவர்கள் உள்குளியல் தான் எடுப்பார்கள். தியானம் மூலமாக உள்குளியல் எடுக்கும்போது, மனம் சுத்தமாகுமாம். அது தான் முக்கியம், வெளி குளியல் தேவை இல்லை என்கின்றனர்.

- Advertisement -

Trending News