பிக்பாஸ் வீட்டில் ஜொலித்தவர் யார்? காணாமல் போனவர் யார்? சரியாக கணித்த போட்டியாளர்கள்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தற்போது முதல் எலிமினேஷன் ரவுண்ட் நடைபெற உள்ளது. அப்போது உலகநாயகன் கமலஹாசன் ஒரு முக்கிய வேலையை 3 நபர்களிடம் ஒப்படைத்துள்ளார். அந்த வேலை என்னவென்றால் எலிமினேஷன் ரவுண்டிற்கு முன்னதாக ஜொலித்தவர் யார்? காணாமல் போனவர்கள் யார்? என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்று பவானி ரெட்டி அபிஷேக் ராஜா சரா ஆகிய மூவரிடம் பிக்பாஸ் ஒப்படைத்தார்.

அவர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நபரையும் தனித்தனியாக அழைத்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டு பிக்பாஸ் வீட்டில் ஜொலித்தவர் யார்? காணாமல் போனவர் யார்? என்பதை தேர்வு செய்தனர். இதற்கான முடிவை நேற்று கமலஹாசன் முன்னிலையில் கூறியபோது பிக்பாஸ் வீட்டில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

ஏனென்றால் ஜொலித்தவர் என்றால் இமான் அண்ணாச்சி என்றும், காணாமல் போனவர் என்றால் சின்னப்பொண்ணு மற்றும் நாடியா சாங் என்றும் சுட்டிக்காட்டினர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சற்று பரபரப்பு நிலவியது.

ஏனெனில் மறைந்து இருந்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு என் பெயரை சூட்டிக் காட்டுகின்றனர் என்றால், நான் மறைந்து இருக்கவில்லை என்றுதானே அர்த்தம் என்கிறார் நாடியா. அத்துடன் நாடியாவின் இந்த பதில் மிகவும் திமிராகவும் பிற போட்டியாளர்களை நேரடியாக தாக்கி கூறியதாகவும் இருக்கிறது.

bb5-cinemapettai89

அதே சமயத்தில் சின்னப்பொண்ணு தன் பெயரை பிறர் சுட்டிக் காட்டியவுடன், நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தும் மறையவில்லை. மக்கள் பார்வையில் இருந்தும் மறையவில்லை என்று கூறி கமல்ஹாசனிடம் கதறி அழுகிறார். இதனால் பிக் பாஸ் வீட்டில் சில மணி நேரத்திற்கு பரபரப்பு நிலவியது.

அதன் பிறகு நடந்த எலிமினேஷன் ரவுண்டில் நாடியா, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனவே மக்கள் நினைத்ததுக்கொண்டது போன்றுதான் பிக்பாஸ் போட்டியாளர்களும் நாடியா சாங் சுவாரசியம் குறைந்து நபராகவே இருப்பதாக எண்ணியது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்