திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

சம்பளத்துல யாரு பெருசுனு அடிச்சு காட்டியாச்சு.. அனிருத் vs ஏ.ஆர். ரஹ்மான்

ஒரு படம் ஹிட் ஆகவேண்டும் என்றால், அந்த படத்தின் பிஜிஎம் மற்றும் பாட்டுக்கள் ஹிட் ஆகவேண்டியது கட்டாயமாக உள்ளது. அதுவும் இப்போதெல்லாம், ஒரு பாட்டு ஹிட் ஆவதை விட, 15 செகண்டை ஹிட் ஆக்குவது தான் முதன்மையாக உள்ளது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்று ஒன்று வந்தபிறகு, ஒரு பாட்டு ஹிட் ஆக அந்த பாட்டு 15 செகண்டுக்கு ரீல்ஸில் ஹிட் ஆனாலே போதும். ஆட்டோமேட்டிக் ஆக யூட்யூபிலும் ட்ரெண்ட் ஆகி பல மில்லியன் வியூஸ் பெற்று, ஹிட் ஆகிவிடும். அதனால் தற்போதைய இசையமைப்பாளர்கள், இந்த 15 செகண்டை எப்படி ஹிட் செய்வது என்பதில் தான் மின்னாக்கிடுகிறார்கள்.

உதாரணத்திற்கு, ஏ.ஆர் ரஹ்மானின் அடங்காத அசுரன் பாடல், மற்றும் அனிருத்தின் மனசிலாயோ பாடல். இந்த இரண்டு பாடலும் முழு நீல பாட்டாக கேட்க பிடிப்பதை விட, ஒரு குறிப்பிட்ட 15 செகண்ட் தான் கேட்க எல்லோருக்கும் பிடிக்கும்.

அனிருத் VS ரஹ்மான்

தற்போது, இவர்களுக்குள் தான் போட்டியே என்று கூட சொல்லலாம். இவர்களுக்கு தான் ஒன்று மாற்றி ஒன்று படம் வந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், இவர்களில் யார் பெஸ்ட் என்ற விவாதத்திற்குள் செல்ல முடியாது. இருவரும் எல்லாவற்றிலும் தனித்துவமானவரகள்.

மார்க்கெட் உச்சியில் இருக்கும் இவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இருவரில் யார் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா? தேவி ஸ்ரீ பிரசாத் ஒரு படத்திற்கு 8 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

அனிருத் ஒரு படத்திற்க்கு 10-12 கோடி வரை சம்பளமாக பெருகிறாராம். அனிருத் வாங்கும் சம்பளத்தை பார்த்து தான் ஏ.ஆர்.ரஹ்மானும் அவர் சம்பளத்தை அதிகரித்தார் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில், ரஹ்மான் ஒரு படத்திற்கு, 10 கோடி வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. கடைசியாக அவர் வாங்கிய சம்பளமும் அது தான் என்று பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -spot_img

Trending News