எப்போது தொடங்கும் ஏகே 62 படப்பிடிப்பு.. அதிரடியாக வரப்போகும் அப்டேட்

அஜித்தின் துணிவு படம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் ஏகே 62 படத்திற்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னதாக விக்னேஷ் சிவன், அஜித், லைக்கா கூட்டணியில் ஏகே62 படம் உறுதியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.

இந்த சூழலில் அடுத்ததாக யார் இந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த வகையில் ஆக்சன் படங்களில் பின்னி பெடலெடுக்கும் மகிழ்திருமேனி அஜித்திடம் கதை கூறியுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

Also Read : அஜித், நயன்தாராவை ஒதுக்க இதுதான் காரணமா..? தயாரிப்பாளர்களை பரிதவிக்க விடும் லேடி சூப்பர் ஸ்டார்.

மேலும் அந்த கதை அஜித்துக்கு ரொம்ப பிடித்து போய்விட்டதாம். ஆகையால் மகிழ்திருமேனி, லைக்கா, அஜித் கூட்டணி கிட்டதட்ட உறுதி ஆகி இருந்தது. ஆனால் இதற்கான அறிவுப்பை தயாரிப்பு நிறுவனம் தள்ளி போட்டுக்கொண்டே இருந்தது.

எப்போது தான் இந்த படத்தின் அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் விரைவில் படக்குழு ஏகே 62 பட அறிவிப்பை வெளியிட உள்ளது. முதல்முறையாக மகிழ்திருமேனி, அஜித் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read : சாப்பாடும் கொடுக்காமல், சம்பளமும்கொடுக்காமல் அசிங்கப்படுத்திய படக்குழு.. அஜித், விஜய் பட வில்லனுக்கு நடந்த கொடூரம்

கண்டிப்பாக அஜித்துக்காக மகிழ் தரமான கதையை தயார் செய்து வைத்திருப்பார். மேலும் மார்ச் மாதத்தில் 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், 120 நாட்களிலேயே படத்தை எடுத்து முடிக்க திட்டம் தீட்டியுள்ளார்களாம்.

மேலும் ஏகே 62 படம் தீபாவளி ரிலீஸுக்கு தயாராகி வருவதாக நம்பக தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ஆகையால் இந்த வாரத்திற்குள் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை லைக்கா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட இருக்கிறது.

Also Read : நெஞ்ச நக்குற கதை வேண்டாம்.. படம் பார்ப்பது போலையே ஸ்டோரியை சொல்லி அஜித்தை கவர்ந்த மகிழ்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை