ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சக்காளத்தி சண்டைக்கு ரூட் போட்ட ராஷ்மிகா.. நடிகர்களை தாண்டி பிரபல கிரிக்கெட் வீரருக்கு வீசிய வலை!

ரியாக்சன் குயின் ஆக ரசிகர்களை கவர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய காதல் சர்ச்சைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

முதலில் ரக்‌ஷித் ஷெட்டி என்கிற கன்னட நடிகரை காதலித்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கூட நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்திற்கு முன்பே பிரிந்து விட்டனர். அதைத்தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா தொடர்ச்சியாக விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

Also Read: பிட்டு துணியில் டிரஸ் தச்ச ராஷ்மிகா.. விருது விழாவில் அரங்கேறிய கூத்து

இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் அடிக்கடி ஜோடியாக வெளிநாடுகளுக்கு சுற்றுலாவும் சென்று வந்தன. இந்த நிலையில் 26 வயதுடைய ராஷ்மிகா 23 வயது உடைய கிரிக்கெட் பிரபலத்திற்கு ரூட்டு போடுவதாக தெரிகிறது.

இதை அவரே சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் கண்ணடித்து காண்பித்துள்ளார்.  ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு ஹீரோயின். மனதில் பட்டதை தைரியமாக பொது மேடையிலேயே பேசும் ஸ்ட்ரைட் ஃபார்வர்ட் கேரக்டர். விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார்.

Also Read: வளர்த்துவிட்டவரை மதிக்காத ராஷ்மிகா.. நச்சென்று பதில் கொடுத்த வெற்றி பட இயக்குனர்

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எனக்கு கிரிக்கெட் பிளேயர் சுப்மன் கில் மேல் ஒரு பெரிய க்ரஷ் என்று பேசினார். சுப்மன் கில் ஏற்கனவே சச்சினின் மகளை காதலிப்பதாக ஒரு ரூமர் போய்க்கொண்டிருக்கிறது.

ராஷ்மிகா, அவர்கள் எல்லாம் பெரிய இடம் கொஞ்சம் உஷாரா இருங்க என கலாய்த்து வருகின்றனர். இதெல்லாம் தெரிந்தும் பரவாயில்லை என சக்காளத்தி சண்டைக்கு ரூட் போட்டு உள்ளார். மேலும்  பாலிவுட்டிற்கு சென்ற பிறகு விஜய் தேவரகொண்டாவை கழட்டிவிட்டு, ராஷ்மிகா பிரபல கிரிக்கெட் பிளேயரை பிடித்து விட்டார் போல என்றும் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிசுகிசுகின்றனர்.

Also Read: காதலுக்கு ஓகே, அந்த விஷயத்துக்கு நோ.. விஜய் தேவரகொண்டா நினைப்பில் பாலை ஊற்றிய ஹீரோயின்

- Advertisement -

Trending News