வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மனக்கசப்பில் விலகிய அஜித்.. ஊர் ஊராய் சுற்றியதின் ரகசியம் இதுதானா

தல அஜித்தின் வலிமை படத்தில் அடுத்து AK61 திரைப்படத்தில் இயக்குனர் வினோத் மூன்றாவது முறையாக அஜித்துடன் கைகோர்க்கிறார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் நடத்தப்பட்டது. AK 61 படத்தில் தல அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகர் மஞ்சு வாரியர் இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் கிளைமாக்ஸுருக்கு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்பதால், அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

இதனால் இந்த இடைவெளியில் தல அஜித் வெளிநாட்டில் பைக் ரைட் செய்துகொண்டிருந்தார். அதன் பிறகு அங்கிருந்து கிளம்பிய அஜித், AK 61 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இணைவார் என நம்பப்பட்ட நிலையில், அஜித்குமார் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்.

விசாரித்துப் பார்த்ததில் கெட்டப் மாற்றுவதற்காக அஜித் ஐரோப்பா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாக சொன்னதெல்லாம் உண்மையல்ல. அஜித்துக்கும் தயாரிப்பாளர் போனி கபூரைக்கும் இடையே சம்பளப் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

அதனால்தான் அஜித் ஒரு மாதம் இடைவேளை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்றிருக்கிறார். அப்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவியது. அந்த சமயம் அஜித்தின் மேனேஜர், போனி கபூரை சந்தித்து சம்பளப் பிரச்சினையை பேசி முடித்திருக்கிறார்.

ஏற்கனவே AK61  படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், அஜித் கேட்கும் சம்பளத்தை கொடுத்து விட வேண்டும் என போனி கபூர் முடிவெடுத்து, அஜித்துடன் இருந்த சம்பள பிரச்சினையை பேசி சரி செய்து கொண்டார். தற்போது AK 60 படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்கள் பாக்கி இருப்பதால், அதில் அஜித் கலந்துகொண்டு படப்பிடிப்பு சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

Trending News