சகிலா சொன்னதை பொய்யாக்க பயில்வான் செய்த காரியம்.. கமுக்கமாக நடந்த நிச்சயதார்த்தம்

Bailwan Ranganadhan: நடிகர் மற்றும் சினிமா விமர்சகர்மான பயில்வான் ரங்கநாதன் ஆரம்பத்தில் நடிகராக பயணித்து வந்தாலும் சமீப காலமாக மற்றவர்களுடைய விஷயங்களில் மூக்கை நுழைத்து அதை முச்சந்தியில் உடைக்கு விதமாக வேலை பார்த்து வருகிறார். இதனால் பலருடைய வெறுப்பை சம்பாதித்து சர்ச்சைக்குரிய நபராக மாறி இருக்கிறார்.

ஆனாலும் அதற்கெல்லாம் அசரமாட்டேன் என்பதற்கு ஏற்ப எல்லாத்தையும் தூசி போல் துடைத்து விட்டு அவதூறுகளை வாரி இறைத்தார். மற்றவர்களை பற்றி பேசும்பொழுது நாக்கில் நரம்பில்லாமல் பேசிய இவருக்கு சகிலா கேட்ட ஒரு வார்த்தை ரொம்பவே சுறுக்கென்று குத்தி இருக்கிறது.

பயில்வான் நடத்தும் நாடகம்

அதாவது சில மாதங்களுக்கு முன் சகிலா நடத்தி வருகிற ஒரு நிகழ்ச்சியில் பயில்வான் கலந்து கொண்டார். அப்பொழுது இவர்களுக்கிடையே நடந்த விவாதத்தில் பயில்வான் மகளைப் பற்றி சில கேள்விகளை சகிலா முன் வைத்திருந்தார். அதாவது உங்களுடைய மகள் ஒரு லெஸ்பியன், இதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு பயில்வான் உச்சகட்ட கோபத்திற்கு சென்று இப்படியெல்லாம் நாக்கில் நரம்பில்லாமல் என் மகளைப் பற்றி பேசாதீர்கள். உங்கள் நாக்கு அழுகிவிடும் என்று பெரிய வாக்குவாதமே நடந்தது அனைவருமே அறிந்த விஷயம். அதாவது ஊரா விட்டு பொண்ணுனா எப்படி வேணாலும் பேசலாம், தான் விட்டு பொன்னை பேசியதும் குத்துதே குடையதே என்ற புலம்பி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பாடகி சுசித்ரா, பயில்வானை வச்சு வாங்கும் அளவிற்கு வார்த்தையாலே குத்தி குதறி விட்டார். ஆனால் அதற்கும் கொஞ்சம் கூட கூச்சநாச்சமே இல்லாமல் பதில் கொடுத்தார். தற்போது எல்லாத்துக்கும் முடிவு கட்டும் விதமாக முக்கியமாக சகிலா சொன்னதை பொய்யாக வேண்டும் என்பதற்காக பயில்வான் அவருடைய மகளுக்கு வீட்டில் எளிமையான முறையில் யாருக்கும் தெரியாமல் நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்திருக்கிறார்.

இது பற்றி தற்போது வரை எந்தவித புகைப்படத்தையும் வெளியிடாமல் கமுக்கமாக வைத்திருக்கிறார். அதாவது தன் மகளை லெஸ்பியன் என்று சகிலா சொன்னதற்காக அதை பொய்யாக்க பயில்வான் நிச்சயதார்த்தம் வரை சென்றிருக்கிறார். ஆனாலும் இது பற்றி எந்தவித புகைப்படத்தையும் ஏன் வெளிவிடவில்லை என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படி என்றால் இதெல்லாம் ஒரு கண் துடைப்பாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -