அந்தரங்க விஷயத்தில் என் புருஷன் இப்படித்தான் இருக்கணும்.. கண்டிஷன் போட்ட ஐஸ்வர்யா ராய்

Aishwarya Rai: உலக அழகியான ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்தாலும் பாலிவுட் பக்கம் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே குரு படத்தில் தன்னுடன் நடித்த அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் உள்ளார்.

சினிமாவில் ஐஸ்வர்யா ராய்க்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் தனக்கு பிடித்த கதாபாத்திரம் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்து வெளியாகி நல்ல வசூல் செய்த பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா நடித்திருந்தார்.

Also Read : தனித்துவமாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த 5 படங்கள்.. இளம் ஹீரோக்களுக்கு கொடுத்த அந்த மூன்று ஹிட்

அதில் நந்தினி கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி இருந்தார். அதில் அவரது அழகு, தோற்றம், தோரணை என அனைத்துமே ரசிகர்களை சுண்டி இழுத்தது. இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் அளித்த பேட்டி தான் இப்போது இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது. அதாவது அந்தரங்க விஷயத்தைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

கணவன் மனைவிக்குள் தாம்பத்தியம் என்பது இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். கணவன், மனைவி இருவரும் ஒன்றாக இணையும் போது அது ஒரு நோக்கத்திற்காக இருக்கக் கூடாது. குழந்தை பெறுவதற்காகவோ அல்லது ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காகவோ அந்த விஷயம் இருக்கக் கூடாது.

Also Read : ஒரே படத்தில் இணையும் 4 ஜாம்பவான்கள்.. அதிரிபுதிரியாக எடுக்கப் போகும் மணிரத்தினம்

இரு மனங்களும் ஒன்று சேர்ந்து காதல் இணைவது போல தான் தாம்பத்தியம் இருக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ராய் கூறி இருக்கிறார். மேலும் என் கணவரிடமும் நான் இப்படித்தான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார். பொதுவாக இந்த விஷயத்தை பற்றி பேச நடிகைகள் கூச்சப்படுவார்கள்.

ஆனால் ஐஸ்வர்யா ராய் மிக தைரியமாக இல்லற வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார். கணவன் மனைவி இருவரும் நீண்ட வருடங்கள் மகிழ்ச்சியாக வேண்டும் என்றால் அவர்களிடையே காதல் எப்போதுமே இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்பதை தான் ஐஸ்வர்யா கூறி உள்ளார்.

Also Read : பிரபுதேவாவுடன் ஜோடி போட மறுத்த ஐஸ்வர்யா ராய்.. லிவிங்ஸ்டன் ஸ்கோர் செய்த படம்

- Advertisement -