சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படம் செய்த சாதனை.. கோலிவுட்டில் குவியும் பாராட்டு

சிங்கப்பூரில் நடைபெற்ற 17வது World Film Carnival என்ற சர்வதேச திரைப்பட விழாவில் தலைமைக்காவலன் திரைப்படம் விருது பெற்றுள்ளது. இந்த விருது சிறந்த Narrative Feature (Outstanding achievement award) வழங்கப்பட்டுள்ளது.

உலகளவில் பல திரைப்படங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரபல மலையாள பட தயாரிப்பாளர் அஜித் பிள்ளை மற்றும் புதுமுக இயக்குனர் சுதாகர் அருண் தாஸ் இயக்கி நடித்துள்ள தலைமைக்காவலன் என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மலையாள முன்னணி நடிகரான பிரித்திவிராஜ் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

thalamai-kavalan
thalamai-kavalan

இந்த விருதை தட்டிச்சென்றதால் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள GOLDEN MARLON AWARDS என்பதற்கு தகுதி பெற்றுள்ளது. இதைத் தவிர PRAGUE International film festival என்ற விருது வழங்கும் விழாவில் இறுதி சுற்று வரை சென்றுள்ளது.

இந்திய அளவில் கோலிவுட் சினிமாவில் பெருமையாக பார்க்கப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இன்னும் பல விருதுகளை தட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

thalamai-kavalan-1
thalamai-kavalan-1

படம் வெளிவருவதற்கு முன்னதாகவே விருதுகளை தட்டிச் சென்றுள்ள ‘தலைமைக்காவலன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர் மத்தியில் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. இந்த படம் தியேட்டரில் அல்லது OTT தளத்தில் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்