கமலஹாசனுக்கு சினிமாவை சுவாசிக்க கற்றுக் கொடுத்த பிரபலம்.. பின் பணத்தாசையால் நடுத்தெருவிற்கு வந்த சோகம்

விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து ஏவி மெய்யப்பன் செட்டியார் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வி கே ராமசாமி. 1947 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 55 ஆண்டுகள் பல படங்களில் குணச்சித்திர நாயகனாக நடித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் தனது 60வது ஆண்டு கலைப் பயணம் நிகழ்ச்சி கொண்டாடும் விழாவில் தனக்கு சினிமாவை சுவாசிக்க கற்று கொடுத்தவர் விகே ராமசாமி என ஒருமுறை புகழ்ந்து பேசினார். அப்போதெல்லாம் 60 வயது நிரம்பிய கதாபாத்திரம் என்றாலே கோடம்பாக்கத்தில் விகே ராமசாமி தான் என பல இயக்குனர்களும் தேடிப்போய் நடிக்க வாய்ப்பை கொடுப்பார்களாம்.

15 படங்கள் தயாரித்த விகே ராமசாமி பெரும் நஷ்டம் அடைந்ததால் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தை மொத்தமும் இழந்தார். இதே நிலைமை தான் கமலுக்கு உண்டு. அதனால் எம்ஜிஆரிடம் தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார், அப்போது எம்ஜிஆருக்கு கழுத்தில் துப்பாக்கி சுட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு அரசியலில் முழுவீச்சாக இறங்கிவிட்டாராம். அதனால் விகே ராமசாமிக்கு உதவ முடியாமல் போனதாக கூறி உள்ளார்.

vk-ramaswamy
vk-ramaswamy

பராசக்தி படத்தில் வில்லன் கதாபாத்திரமும், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் எட்டப்பன் கதாபாத்திரமும் ரசிகர்கள் மிகவும் பிரபலமடைந்தது. அதுமட்டுமில்லாமல் ஆண்பாவம் படத்தில் பாண்டியராஜனுக்கு அப்பாவாக இவர் நடித்து காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

படத்தயாரிப்பில் பணத்தை இழந்த விகே ராமசாமி அதன் பிறகு ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது ரஜினி நடிப்பில் வெளியான அருணாச்சலம் படத்தில் நடித்துள்ளார்.

விகே ராமசாமி படத்தயாரிப்பாள் பணத்தை இழந்ததை அறிந்த ரஜினிகாந்த் அப்படத்தில் அவருக்கு ஒரு ரூபாய் கூட பணம் தராமல் பட தயாரிப்பாளராக சேர்த்துக் கொண்டுள்ளார். பின்பு லாபத்தில் ஒரு பங்கு அவருக்கு கொடுத்து உதவியுள்ளார் ரஜினிகாந்த். அந்த அளவிற்கு சினிமாவில் பல தடைகளையும் தாண்டி பல படங்களில் நடித்து சாதித்துள்ளார் விகே ராமசாமி.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்