VJ ரம்யாவை திருமணம் செய்தாரா விஜய் டிவி புகழ்? மாலையும் கழுத்துமாக வெளியான புகைப்படத்தால் பரபரப்பு

விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி தற்போது சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம்வரும் ரம்யாவை விஜய் டிவியில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் திருமணம் செய்து கொண்டதாக வெளியான புகைப்படம் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

ரசிகர்களின் விருப்பமான தொகுப்பாளர்களில் ஒருவர் தான் VJரம்யா. முன்னணியில் இருக்கும் அனைத்து டிவி சேனல்களிலும் பணியாற்றினார். ஆனால் விஜய் டிவியில் பணியாற்றும் போது தான் ரம்யாவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு வரவேற்பு கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் பணியாற்றிய பிறகுதான் ரம்யாவுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதன்பிறகு சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்டார் ரம்யா.

ஆனால் திருமணமான பத்தே நாளில் தன்னுடைய கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாக பிரிந்து வந்து விட்டார். இதையும் அவரே சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது சிங்கிளாக இருக்கும் ரம்யா சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் புகழ். தற்போது முன்னணி நடிகர்கள் ரேஞ்சுக்கு காமெடி நடிகராக புகழ் பல ரசிகர்களை உருவாக்கியுள்ளார்.

யூடியுப் தளங்களில் வெளியாகும் புகைப்படங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும். அந்த வகையில் விஜய் டிவி புகழ் மற்றும் ரம்யா இருவரும் திருமணம் செய்து கொண்டு மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காக ஒரு யூடியூப் சேனல் வேண்டுமென்றே ரம்யா மற்றும் புகழ் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படத்தை உருவாக்கியது தெரியவந்துள்ளது. தவறான புகைப்படமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

pugazh-vjramya-cinemapettai
pugazh-vjramya-cinemapettai
- Advertisement -spot_img

Trending News