ரக்க்ஷன், ஜாக்லினுக்கு இடையே உள்ள உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்த வைரல் புகைப்படம்.. இத சொல்றதுக்கு 10 வருஷம் ஆச்சா!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சேனலாக இருப்பதுதான் விஜய் டிவி. இந்த சேனலில் ஆஸ்தான தொகுப்பாளராக உருவெடுத்து கொண்டிருப்பவர் VJ ரக்க்ஷன்.

தற்போது ரக்க்ஷன்குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியை நகைச்சுவையோடு தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் தமிழகத்தில் இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் VJ ரக்க்ஷன், துல்கர் சல்மானுடன் இணைந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்னும் திரைப்படத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார்.

இந்தநிலையில் VJ ரக்க்ஷன் முதன்முறையாக தனது மனைவியின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது இதுவரை VJ ரக்க்ஷன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்த்த எவருக்கும் அவருக்கு திருமண விஷயமே தெரியாது.

அதுமட்டுமில்லாமல் ரக்க்ஷன், ஜாக்லினுக்கும் இடையே காதல் இருப்பதாக வெளிவந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திருமணம் முடிந்து குழந்தை இருப்பது தெரிந்தால் இந்த சர்ச்சைக்கு அப்பவே முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால் ரக்ஷன் ரசிகைகள் பட்டாளம் குறைந்து விடுமோ என்பதற்காகக் கூட சைலண்டா இருந்து விட்டாராம்.

இப்படி இருக்க, தற்போது ரக்க்ஷன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘10 இயர்ஸ் சாஃப் லவ்’ என்று பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ரக்க்ஷனுக்கு ஒரு குழந்தையும் உள்ளதாம்.

மேலும் ரக்க்ஷனுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது என்ற தகவலை கேட்ட ரக்க்ஷனின் அதி தீவிர ரசிகைகள் சோகக் கடலில் மூழ்கி உள்ளனராம்.

rakshan wife
rakshan wife