புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய் டிவி ஜாக்லினுக்கு விரைவில் திருமணம்? மாப்பிள்ளை நம்ம ரக்சன் இல்லையாமே!

விஜய் டிவியில் எந்த அளவுக்கு ரியாலிட்டி ஷோக்கள் புகழ் பெறுகிறதோ அதே அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் பணியாற்றிய தொகுப்பாளர்களுக்குள் காதல் சர்ச்சைகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் பணியாற்றிய பலருக்கும் திருமணமாகி விவாகரத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரியாலிட்டி ஷோக்களில் கிங் என்றால் அது விஜய் டிவிதான். மற்ற சேனலை காட்டிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். ஏன் சீரியல்கள் கூட இளம் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகிறது.

அந்த வகையில் தொகுப்பாளராக பணியாற்றி தற்போது சீரியல்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் தான் ஜாக்லின். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அப்போது குண்டாக இருப்பார். இதனாலேயே வரும் போட்டியாளர்கள் ஜாக்லினை கலாய்த்து கைதட்டல்கள் வாங்கிவிடுவார்கள்.

ஆனால் சமீபகாலமாக ஜாக்லின் ரேஞ்சே வேற மாதிரி ஆகிவிட்டது. ஹீரோயின் ஆன பிறகு கஷ்டப்பட்டு ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து தற்போது சிக்குன்னு செவத்த குட்டி மாதிரி ஆகிவிட்டார்.

இந்நிலையில் ஜாக்லின் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். அதற்காக எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அழகான, நல்ல மாப்பிள்ளையாக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என ஜாலியாக பேசியுள்ளார்.

vj-rakshan-jacqueline
vj-rakshan-jacqueline

ஜாக்லின் ஜாலியாக பேசினாலும் ஆரம்ப காலகட்டங்களில் உடன் தொகுப்பாளராக பணியாற்றிய ரக்ஷன் என்பவருடன் காதல் கிசுகிசுக்களில் மாட்டினார். இந்த செய்தி பல பத்திரிகைகளில் வெளியானது. ஆனால் அதன் பிறகு ஏற்கனவே ரக்சனுக்கு திருமணமாகி விட்டது என சமீபத்தில் ஒரு பிரச்சனையில் மாட்டியபோது அவரே ஓப்பனாக தெரிவித்துவிட்டார் என்பதும் கூடுதல் தகவல்.

- Advertisement -

Trending News