அடுத்த ஆபாச ஆப்பு நமக்கா இருக்குமோ? பதற்றத்தில் VJ பார்வதி வெளியிட்ட பரபரப்பான பதிவு

தமிழகத்தில் என்ட்ரியான கொஞ்ச  காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் VJ பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார். அதேபோல், பார்வதி மாடல் மற்றும்  ஜர்னலிஸ்ட் ஆவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உண்டு  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பார்வதி தற்போது ஆபாசமாக பேசிய யூடியூபர்கள் கைதாவது பற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதாவது VJ பார்வதி பல்வேறு பிரபலங்களைப் பேட்டி எடுத்ததோடு, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சிகளில் VJயாக   பணியாற்றியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், பொது இடங்களுக்கு வரும் இளம் ஆண்கள், பெண்கள் ஆகியோரிடம் மாதவிடாய், ஆணுறை, உடலுறவு என பல மறைமுக விஷயங்களை குறித்து கேள்வி கேட்டு பலரை முகம் சுளிக்க வைத்துள்ளார் பார்வதி. ஆனாலும் இவரது வீடியோக்களை பார்க்க  தனி ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

இந்தநிலையில் ‘பார்வதியும் ஆபாசமாக பேசி வருகிறார். அவரையும் கைது செய்யவேண்டும்’ என்று பல சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனராம்.

vj-parvathy
vj-parvathy

இதற்கு பதிலளிக்கும் வகையில்  பார்வதி தனது சோசியல் மீடியா பக்கத்தில், ‘நா மத்த யூடியூப் சேனல் மாதிரி கீழ்த்தனமான கேள்விகளெல்லாம் கேக்க மாட்டேன். என்ன இதுல கோத்து விடாதீங்க’ என்று கூறியுள்ளாராம். மேலும் பார்வதியின் இந்தப் பதற்றமான பதிவிற்கு மிக முக்கிய காரணம் சமீபத்தில் சென்னை டாக்  என்ற யூடியூப் சேனலை சார்ந்த மூன்று பேர் கைதானது தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்