6 டிவியிலும் ஆல்-ரவுண்டராக கலக்கிய VJ சித்ரா.. இன்று வரை யாராலும் நிரப்ப முடியவில்லை

இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி சின்னத்திரை தொடர்களில் மூலம் புகழ் பெற்றவர். இதன் மூலம் வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். சில நடிகைகள் குறிப்பிட்ட தொலைக்காட்சிகளில் மட்டுமே நடித்து வருவார்கள். ஆனால் இவர் எல்லா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்த நடிகை நடிக்காத தொலைக்காட்சியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா தொலைக்காட்சியிலும் நடித்துள்ளார். இவர் தொகுப்பாளினி, நடிகை, நடனம், பாடல், நகைச்சுவை என எல்லாத்துலயும் ஆல்-ரவுண்டராக இருந்துள்ளார். மக்கள் தொலைக்காட்சியில் சட்டம் சொல்வது என்ன என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார் வி ஜே சித்ரா.

அதன்பிறகு அதே தொலைக்காட்சியில் என் சமையல் அறையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வேந்தர் தொலைக்காட்சியில் ஜில் ஜங் ஜக், ஜீ தமிழில் தொலைக்காட்சியில் அஹா மாமியார் ஓஹா மருமகள், விஜய் தொலைக்காட்சியில் வசூல் வேட்டை ஆகிய நிகழ்ச்சிகளை சித்ரா தொகுத்து வழங்கினார்.

சித்ரா ஜெயா தொலைக்காட்சியில் மன்னன் மகள், சன் தொலைக்காட்சியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா, ஜீ தமிழில் தொலைக்காட்சியில் டார்லிங் டார்லிங், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வேலுநாச்சி, விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. கடந்த 2019 மற்றும் 2020ஆம் ஆண்டின் சிறந்த 10 தொலைக்காட்சி நடிகைக்கான பட்டியலில் சித்ரா பெயர் இடம் பெற்றது. இவர் 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாளில் மண்ணுலகை விட்டு பிரிந்தாலும் மக்கள் மனதில் இன்று வரை முல்லையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்