திருமணமாகி 10 வருஷமாச்சு, இன்னமும் குழந்தை இல்லையா? ரசிகரின் கேள்வியால் நொந்துபோன vj பாவனா

சினிமா நடிகர்களுக்கு உள்ள வரவேற்பு போலவே சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஒரு சிலருக்கு ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்கும்.

அந்த வகையில் முதலிடத்தை பிடிப்பவர்கள் என்றால் அது விஜய் டிவி தொகுப்பாளர்கள் தான். பெரும்பாலும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கும் ஒவ்வொரு தொகுப்பாளருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர்தான் நம்ம vj பாவனா.

ஒருகாலத்தில் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக பணியாற்றும் போது அவருடன் சேர்ந்து ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். ஏன் சில சமயம் சிவகார்த்திகேயனுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது சில சங்கடங்கள் நேர்ந்தால் அதை பாவனா தான் தீர்த்து வைப்பார் என சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

தற்போது விஜய் டிவியிலிருந்து மாறி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் பணியாற்றிவரும் vj பாவனா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார். அதில் ரசிகர் ஒருவர் திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகிறது என கேட்டுள்ளார்.

அதற்கு பத்து வருடங்கள் ஆகிவிட்டது என vj பாவனா பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து மற்றொரு ரசிகர் உங்களுக்கு குழந்தை உள்ளது. அது சரியா? தவறா? என கேட்டுள்ளார். இங்குதான் விஜய் பாவனா வருத்தப்பட்டுள்ள விஷயம் வெளியில் தெரிய வந்தது.

குழந்தை இல்லை என்பதை சொல்லாமல் தான் வளர்க்கும் நாய் குட்டியை காட்டி, எனக்கு ஒரு சகோதரர் உள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் திருமணமாகி பத்து வருடமாகியும் பாவனாவுக்கு குழந்தை இல்லை என்ற விஷயம் ரசிகர்களுக்கு தெரியவந்தது. இந்த பதிவு பாவனாவை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கண்கலங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

vj-bhavana-instapost
vj-bhavana-instapost