12 வருடங்களில் சினிமா வாய்ப்பே கிடைக்கவில்லையா? ரசிகர் கேட்ட கேள்விக்கு நெத்தியடி பதிலளித்த VJ அஞ்சனா!

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்கி தற்போது ஜீ தமிழ் சேனலில் ஆஸ்தான தொகுப்பாளினியாக மாறி இருப்பவர்தான் VJ அஞ்சனா.

அதுமட்டுமில்லாமல் அஞ்சனா பல ரியாலிட்டி ஷோக்கள், விருது நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்வுகள் போன்றவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். மேலும் அஞ்சனாவிற்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி விடுவார். அதேபோல் சஞ்சனா தற்போது சிறிது இடைவெளிக்குப் பிறகு பிரபல தொலைக்காட்சியில் ‘சண்டே கலாட்டா’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.

vj-anjana-cinemapettai

 

இந்த நிலையில் அஞ்சனாவிடம் ரசிகர் ஒருவர், ’12 வருஷமாக திரையுலகில் இருந்தாலும் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லையா?’ என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அஞ்சனா,

‘எனக்கு நடிப்பின் மீது அவ்வளவு ஆர்வம் வரவில்லை. ஆனால் நான் போட்டோஷூட் நடத்தும் போது சினிமாவில் நடிக்கும் ஆசை எல்லாம் இருக்கிறதா? என்று நக்கல் அடிப்பார்கள்.

ஆனால் என்னை பொறுத்தவரை சின்ன ஸ்கிரீன், பெரிய ஸ்கிரீன் என்பது கிடையாது. என்னுடைய இடம் இதுதான்’ என்று தன்னுடைய ரசிகர்களின் கேள்விக்கு அஞ்சனா பதில் அளித்துள்ளார்.

- Advertisement -