மூளைச்சாசாவில் இறந்த விவேக் மகனை பார்த்துள்ளீர்களா? 13 வயதில் கடைசியாக தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ!

கடந்த வாரம் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இறந்த செய்தி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் அவரது மகன் மூளைச்சாவு அடைந்து இறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் எப்போதுமே தன்னுடைய காமெடி காட்சிகளில் மக்கள் சிந்திக்கும் வண்ணம் ஏதாவது ஒரு கருத்தை வைத்து நடித்து வந்தவர் விவேக். அதுமட்டுமில்லாமல் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் விசுவாசி.

விவேக் நடிப்பில் அடுத்தடுத்து அரண்மனை 3, இந்தியன் 2 போன்ற பெரிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் அரண்மனை3 இப்படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமும் முடிவடைந்து விட்டது.

ஆனால் இந்தியன் 2 படம் மட்டும் பாதி காட்சிகள் படமாக்கப்பட்டு மீதி தொடங்காத நிலையில் விவேக்கிற்கு இப்படி நடந்து படக்குழுவினர் அதிர்ச்சியாக்கி விட்டது. இருந்தாலும் அதற்கான வேறு வழியை படக்குழுவினர் கண்டுபிடித்து விட்டார்களாம்.

vivek-and-his-son-with-ar-rahman-cinemapettai
vivek-and-his-son-with-ar-rahman-cinemapettai

நடிகர் விவேக் திடீரென மாரடைப்பு காரணமாக இறந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறுகின்றனர். ஆனால் 2015ஆம் ஆண்டு விவேக் மகன் பிரசன்ன குமார் என்பவர் மூளைச்சாவு அடைந்ததிலிருந்துதான் விவேக் மிகவும் மன சோர்வாக காணப்பட்டார் என அவரது வட்டாரங்களில் கூறுகின்றனர்.

விவேக் மகன் பிரசன்ன குமார் தனது 13 வயதாக இருக்கும் போது உடல்நலக் குறைவு காரணமாக மூளைச்சாவு அடைந்து பின்னர் இயற்கை எய்தினார். அதுவே விவேக்கை மிகவும் பாதித்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் விவேக் மற்றும் அவரது மகன் பிரசன்னகுமார் இருவரும் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vivek-and-his-son-cinemapettai
vivek-and-his-son-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்