Entertainment | பொழுதுபோக்கு
விசு இயக்கத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 6 படங்கள்.. கதை வசனத்தில் மனுஷன் பின்னிட்டார்
தமிழ்சினிமாவில் இயக்கம், நடிப்பு என அனைத்திலும் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யம் படைத்தவர் விசு. கூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவரின் படங்களின் மூலம் நமது தலைமுறைகள் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். நடிப்பை கைவிட்ட பின் விசுவின் அரட்டை அரங்கம் சன் டிவியில் பிரபலமானது. இவர் இயக்கி நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட்டான படங்களின் வரிசைகளை தற்போது பார்க்கலாம்.
டௌரி கல்யாணம்:
கதை, திரைக்கதை, இயக்கம் என்று அனைத்திலும் கொடிகட்டிப் பறந்தவர் விசு. இவர் படைப்பில் வெளிவந்த டௌரி கல்யாணம் படத்தில் விசுவுடன் சேர்ந்து விஜயகாந்த், எஸ்.வி.சேகர், ஸ்ரீவித்யா போன்ற பல பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். வரதட்சணை கொடுமையை மையமாக வைத்து குடும்பப்பாங்கான இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
முழு படத்தை பார்க்க : Click here
சம்சாரம் அது மின்சாரம்:
1986ம் ஆண்டு விசுவின் இயக்கத்தில் பிரமாண்டமாக வெற்றி பெற்ற படம் சம்சாரம் அது மின்சாரம். கூட்டு குடும்பத்தில் நடக்கும் சண்டை சச்சரவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் கிராமத்து மக்களை மிகவும் கவர்ந்தது.
175 நாட்களை தாண்டி இந்த படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. விசுவுடன் சேர்ந்து லட்சுமி, சந்திரசேகர், ரகுவரன், டெல்லிகணேஷ், மனோரமா போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த படம் பல விருதுகளை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
முழு படத்தை பார்க்க : Click here
மணல் கயிறு:

manal-kayiru-full-movie-online
1982 ஆம் ஆண்டு விசு வெளியீட்டில் சூப்பர் ஹிட்டான படம் மணல் கயிறு. இந்த படத்தில் விசுவுடன் சேர்ந்து மனோரமா, எஸ் வி சேகர் நடித்திருப்பார்கள். 100 நாட்களை தாண்டி இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை வைத்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது.
முழு படத்தை பார்க்க : Click here
சிதம்பர ரகசியம்:

Chidambara Ragasiyam Full Movie Online
1985 ஆம் ஆண்டு விசு திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி கண்ட படம் சிதம்பர ரகசியம். இந்த படத்தில் விசுவுடன் சேர்ந்து எஸ்.வி.சேகர், டெல்லி கணேஷ், அருள் பண்டியன் இலவரசி, மனோரமா போன்ற பல படங்களில் நடித்து இருப்பார்கள் காமெடி மற்றும் த்ரில்லர் கலந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
முழு படத்தை பார்க்க : Click here
பெண்மணி அவள் கண்மணி:
1988-ல் நடித்து தயாரித்து வெளிவந்து வெற்றி பெற்ற படம் பெண்மணி அவள் கண்மணி.பிரதாப், சீதா கிஷ்மு கொண்ட பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். கிட்டத்தட்ட 125 நாட்களை தாண்டி இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
முழு படத்தை பார்க்க : Click here
சகலகலா சம்பந்தி:
1989இல் விசுவின் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் சகலகலா சம்பந்தி. இந்த படத்தில் விசுவுடன் இணைந்து சரண்யா, டெல்லி கணேஷ், மனோரமா போன்ற பல பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். 100 நாட்களை தாண்டி இந்த படமும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.
முழு படத்தை பார்க்க : Click here
தமிழ் சினிமாவில் தனக்கென்று தடம் பதித்தவர் விசு தற்போது அவர் உயிருடன் இல்லை என்றாலும் அவரின் திரைப்படங்கள் மக்களிடம் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் அளவிற்கு வெற்றி அடைந்துள்ளது. மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அனைத்து படங்களையும் பார்த்து ரசியுங்கள்.
